ஐபிஎல்: தொடரும் சிஎஸ்கே ஆதிக்கம்; என்ன செய்யபோகின்றன அந்த 3 அணிகள்?

சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெற்ற ஆட்டங்கள் ஐபிஎல் போட்டியை மேலும் பரபரப்பாக்கியுள்ளன... 
ஐபிஎல்: தொடரும் சிஎஸ்கே ஆதிக்கம்; என்ன செய்யபோகின்றன அந்த 3 அணிகள்?

சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெற்ற ஆட்டங்கள் ஐபிஎல் போட்டியை மேலும் பரபரப்பாக்கியுள்ளன. 

நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னைக்கு இது 4-ஆவது வெற்றியாகும். அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களை எதிர்கொண்ட ஹைதராபாதுக்கு இது 2-ஆவது தோல்வி.

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து 183 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாத், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ராயுடு ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.

ராஜஸ்தானில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 4 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 40 ரன்கள் எடுக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. இறுதிவரை போராடிய கிருஷ்ணப்பா கெளதம், 2 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையிருந்தபோது சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 33, உனத்கட் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்ட நாயகன் ஆனார்.

இந்த ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. சிஎஸ்கேவும் பஞ்சாப்பும் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்று முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

ஆனால் இந்த ஐபிஎல் தில்லி, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகளுக்கும் சோகமாக அமைந்துள்ளன. 8 அணிகளில் இந்த மூன்று அணிகள் மட்டுமே இதுவரை 3 வெற்றிகளை அடையாமல் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அதிலும் தில்லியும் மும்பையும் இதுவரை தலா 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளன. இதனால் இந்த மூன்று அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுவது மிகவும் கடினம் என்று கணிக்கப்படுகிறது. 

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

வரிசை எண் அணிகள்ஆட்டங்கள்வெற்றிகள்தோல்விகள்புள்ளிகள்நெட் ரன்ரேட்
 1.  சென்னை 5 4 1 8 0.742
 2. பஞ்சாப் 5 4 1 8 0.446
 3. கொல்கத்தா  6 3 3 6 0.572
 4. ஹைதரபாத்  5 3 2 6 0.301
 5. ராஜஸ்தான் 6 3 3 6 -0.801
 6. பெங்களூர் 5 2 3 4 -0.486
 7. மும்பை 5 1 4 2 0.317
 8. தில்லி 5 1 4 2 -1.324

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com