தலா ஒரு அரை சதம்: ஆறு சிஎஸ்கே வீரர்களின் சாதனை; இதர அணிகள் பெருமூச்சு!

வேறெந்த அணியிலும் ஆறு வீரர்கள் இதுவரை அரை சதமெடுக்கவில்லை. இதற்கு அடுத்ததாக...
தலா ஒரு அரை சதம்: ஆறு சிஎஸ்கே வீரர்களின் சாதனை; இதர அணிகள் பெருமூச்சு!

2018 ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சிஎஸ்கே வீரருக்கு 8-ம் இடம் தான் கிடைத்துள்ளது. எனினும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் பலம் வாய்ந்த பேட்டிங் அணி என்றால் அது சிஎஸ்கே தான். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு சிஎஸ்கே வீரராவது அரை சதமெடுக்காமல் இருந்ததில்லை.

இந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி ஆறு அரை சதங்களை எடுத்துள்ளது. இந்த ஆறும் வெவ்வேறு வீரர்களால் எடுக்கப்பட்டவை. இந்தப் பெருமை வேறு எந்த அணிக்கும் கிடையாது.

அரை சதமெடுத்த சென்னை வீரர்கள்

முதல் ஆட்டம் - பிராவோ 68
2-ம் ஆட்டம் - சாம் பில்லிங்ஸ் 56
3-வது ஆட்டம் - தோனி 79*
4-வது ஆட்டம் - ஷேன் வாட்சன் 106
5-வது ஆட்டம் - ராயுடு 79, ரெய்னா 54*

அதாவது நேற்று களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் மற்றும் சில ஆட்டங்களில் கடைசியில் களமிறங்கிய ஜடேஜா தவிர சிஎஸ்கே அணியின் அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் இந்த ஐபிஎல் போட்டியில் அரை சதமெடுத்துள்ளார்கள். இதுபோல வேறெந்த அணியிலும் ஆறு வீரர்கள் இதுவரை அரை சதமெடுக்கவில்லை. பஞ்சாப் அணியில் ஆறு அரை சதங்கள் எடுக்கப்பட்டாலும் அவை கெயில், ராகுல், கருண் நாயர் ஆகிய மூவரால் மட்டுமே எடுக்கப்பட்டவை.

இதற்கு அடுத்ததாக மும்பை, கொல்கத்தா அணிகளில் 4 வீரர்கள் அரை சதமெடுத்துள்ளார்கள். ராஜஸ்தான் அணி எடுத்த இரு அரை சதங்களும் சஞ்சு சாம்சன் எடுத்தவை. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங் அணி என்கிற பெருமையைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.

ஐபிஎல் 2018 - அதிக அரை சதங்கள்

சிஎஸ்கே - 6 அரை சதங்கள் ( 6 வீரர்கள்)
பஞ்சாப் - 6 அரை சதங்கள் ( 3 வீரர்கள்)
மும்பை இந்தியன்ஸ் - 5 அரை சதங்கள் ( 4 வீரர்கள்)
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - 5 அரை சதங்கள் ( 3 வீரர்கள்)
தில்லி - 4 அரை சதங்கள் ( 4 வீரர்கள்)
கொல்கத்தா - 4 அரை சதங்கள் ( 4 வீரர்கள்)
பெங்களூர் - 4 அரை சதங்கள் ( 2 வீரர்கள்)
ராஜஸ்தான் - 2 அரை சதங்கள் ( 1 வீரர்)

ஐபிஎல் 2018 - அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்கள்

ராயுடு - 201 ரன்கள்
ஷேன் வாட்சன் - 184 ரன்கள்
தோனி - 139 ரன்கள்
சுரேஷ் ரெய்னா - 118 ரன்கள்
பிராவோ - 104 ரன்கள்
பில்லிங்ஸ் - 68 ரன்கள்

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

வரிசை எண் அணிகள்ஆட்டங்கள்வெற்றிகள்தோல்விகள்புள்ளிகள்நெட் ரன்ரேட்
 1.  சென்னை 5 4 1 8 0.742
 2. பஞ்சாப் 5 4 1 8 0.446
 3. கொல்கத்தா  6 3 3 6 0.572
 4. ஹைதரபாத்  5 3 2 6 0.301
 5. ராஜஸ்தான் 6 3 3 6 -0.801
 6. பெங்களூர் 5 2 3 4 -0.486
 7. மும்பை 5 1 4 2 0.317
 8. தில்லி 5 1 4 2 -1.324

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com