முகமது சிராஜ் வீட்டில் ஹைதராபாத் பிரியாணியை ருசித்துச் சாப்பிட்ட விராட் கோலி (விடியோ)

முகமது சிராஜ் வீட்டில் ஹைதராபாத் பிரியாணியை ருசித்துச் சாப்பிட்ட விராட் கோலி (விடியோ)
Updated on
1 min read

ஹைதராபாத் சென்றாலே நம் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாணி ஞாபகம் வராமல் இருக்காது. 

2014-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிக்காக ஹைதராபாத் வந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு தன்னுடைய வீட்டிலிருந்து பிரியாணியை அனுப்பினார் அம்பட்டி ராயுடு. ஆனால் வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்கமுடியாது என்று வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நிர்வாகம் கண்டிப்பாகக் கூறியதால் வேறொரு ஹோட்டலுக்கு இடம்மாறினார்கள் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள். அந்தளவுக்கு ஹைதராபாத் பிரியாணிக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள். 

இந்நிலையில் ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் - ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி ஹைதராபாத்துக்கு வந்திருந்த பெங்களூர் அணி வீரர்களுக்குத் தன்னுடைய வீட்டில் விருந்தளித்துள்ளார் ஆர்சிபி வீரரான முகமது சிராஜ். கோலி, பார்தீவ் படேல் உள்ளிட்ட ஆர்சிபி வீரர்களுக்குச் சுவையான ஹைதராபாத் பிரியாணியும் ஹைதராபாத் பாரம்பரிய உணவுகளும் விருந்தில் பரிமாறப்பட்டுள்ளன. 

தொலைக்காட்சியில் ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டு தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் அமர்ந்து உணவு உண்டுள்ளார் விராட் கோலி. விருந்துக்கு வந்திருந்த ஆர்சிபி வீரர்கள் இரண்டு மணி நேரம் சிராஜ் வீட்டில் தங்கி, பிறகு ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார்கள்.

சிராஜை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2.60 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி.

விடியோ: Telangana Today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com