ரிஷப் பந்த் அதிரடி சதம்: அறியாத விஷயங்கள்!

ஐபிஎல்-லில் அனைவருக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் புவனேஸ்வர் குமார், ரஷித் கான் ஆகியோரின் பந்துவீச்சை...
ரிஷப் பந்த் அதிரடி சதம்: அறியாத விஷயங்கள்!

தில்லிக்கு எதிரான அதிரடியாக ஆடிய ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. எனினும் ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டம் ரசிகர்கள், நிபுணர்களின் பாராட்டுகளை அள்ளியுள்ளது.

தில்லி டேர் டெவில்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு இடையிலான ஐபிஎல் 42-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு புதுதில்லியில் நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தில்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 187 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் 2 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய பந்த், 7 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 128 ரன்களைக் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ரிஷப் பந்தின் அதிரடி சதத்தின் முக்கிய அம்சங்கள்:

* தில்லி அணியின் ஸ்கோரில் 68.4% ரன்களை ரிஷப் பந்தே எடுத்தார். ஐபிஎல்-லில் இது இரண்டாவது அதிகப் பங்களிப்பு. ஐபிஎல்-லின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அடித்த 222 ரன்களில் மெக்கல்லம் மட்டும் 158 ரன்கள் குவித்தார். அணியின் ஸ்கோரில் 71.7% ரன்கள். இதை இதுவரை யாராலும் தாண்டமுடியவில்லை. 

* ஐபிஎல்-லில் நான்காவதாக அல்லது அதற்கும் கீழே களமிறங்கிய வீரர்களில் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு ராஜஸ்தானுக்கு எதிராக முதல் ஐபிஎல் போட்டியில் சிமண்ட்ஸ் 117* ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. அதை பந்த் தாண்டியுள்ளார். 

* 20 வயதில் ( 20 வருடம் 218 நாள்கள்) ஐபிஎல் சதம் எடுத்துள்ளார் பந்த். ஐபிஎல்-லில் சதமடித்த இரண்டாவது இளம் வீரர் இவர். இதற்கு முன்பு, 2009-ல்  19 வயதில் ( 19 வருடம் 253 நாள்கள்) பெங்களூர் வீரராக மணீஷ் பாண்டே டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக 114 ரன்கள் எடுத்ததே இன்றும் சாதனையாக உள்ளது.

* இந்த ஐபிஎல்-லில் அனைவருக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் புவனேஸ்வர் குமார், ரஷித் கான் ஆகியோரின் பந்துவீச்சை பந்த் சிதறடித்தார். புவனேஸ்வரின் 11 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் பந்த். புவனேஸ்வரின் பந்துவீச்சில் டி20 ஆட்டங்களில் வேறு யாரும் இந்தளவுக்கு ரன்கள் குவித்ததில்லை. ரஷித் கானின் 13 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார் பந்த். அதாவது இருவருடைய பந்துவீச்சுகளில் 24 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார் பந்த். 

* டி20 போட்டிகளில் இருமுறை மட்டுமே புவனேஸ்வர் குமார் 50 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.

4-0-55-2 vs பெங்களூர், 2016 (கடைசி 5 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார் சர்ஃபராஸ் கான்)
4-0-51-1 vs தில்லி, 2018 (கடைசி 5 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார் ரிஷப் பந்த்)

* 128 ரன்கள் எடுத்தாலும் ரிஷப் பந்தின் தில்லி அணி தோல்வியே அடைந்தது. தோல்வியில் அமைந்த ஐபிஎல் சதங்கள்

* 128* ரிஷப் பந்த்
* 117* சிமண்ட்ஸ்
* 115* சாஹா

* 2016-ல் ஐபிஎல்-லில் 1000 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் சஞ்சு சாம்சன் (21 வருடம் 183 நாள்கள்). நேற்று, அதை முறியடித்து ஐபிஎல்-லில் 1000 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் பந்த் (20 வருடம் 218 நாள்கள்). 

* ஐபிஎல் போட்டியில் சதமெடுத்த இந்தியர்கள் (13 பேர்):

மணீஷ் பாண்டே, யூசுப் பதான், முரளி விஜய், வல்தாட்டி, டெண்டுல்கர், சேவாக், ரஹானே, ரோஹித் சர்மா, ரெய்னா, சாஹா, கோலி, சாம்சன், ரிஷப் பந்த்.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் - இந்தியர்கள்

128* - ரிஷப் பந்த் vs ஹைதராபாத், 2018
127 - முரளி விஜய் vs ராஜஸ்தான், 2010
126* - சுரேஷ் ரெய்னா vs பெங்கால், 2018

ரிஷப் பந்த் - 2018 ஐபிஎல்

20 வயது பந்த், 521 ரன்களை இதுவரை எடுத்துள்ளார். 27 சிக்ஸர்கள்.

500+ ரன்கள் எடுத்த இளம் வீரர்
25+ சிக்ஸர்கள் அடித்த இளம் வீரர்.

2018 ஐபிஎல்

அதிக ரன்கள்: ரிஷப் பந்த்
அதிக பவுண்டரிகள்: ரிஷப் பந்த்
அதிக சிக்ஸர்கள்: ரிஷப் பந்த் / தோனி
அதிகபட்ச ரன்கள்: ரிஷப் பந்த்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com