

ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி மிகவும் திணறி 7 விக்கெட்டை இழந்து 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கார்லோஸ் சிறப்பாக ஆடி 43 ரன்களை
குவித்தார்.
4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 67 ரன்களுடன் டுபிளெஸிஸும் 15 ரன்களுடன் தாகுரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டுபிளெஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 14 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை 80 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது. 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 20, 17 ரன்களை சென்னை எடுத்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இதுவரை இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு இதுவரை பங்களிப்பு செய்யாத டுபிளெஸிஸ் நேற்று கடைசிவரை விளையாடி சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய உதவினார். இந்த வருடம் ஆட்ட நாயகன் விருது பெரும் 8-வது சிஎஸ்கே வீரர் இவர். வேறு எந்த அணியிலும் இந்தளவுக்கு பலர் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்ததில்லை.
ஐபிஎல் 2018 - ஆட்ட நாயகன் விருது பெற்ற சிஎஸ்கே வீரர்கள்
ராயுடு
வாட்சன்
பில்லிங்ஸ்
பிராவோ
தோனி
ஜடேஜா
இங்கிடி
டு பிளெஸ்ஸிஸ்
ஐபிஎல் 2018 - ஒவ்வொரு அணியில் ஆட்ட நாயகன் விருது பெற்றவர்களின் எண்ணிக்கை
8 - சென்னை
5 - தில்லி
5 - மும்பை
4 - பஞ்சாப்
4 - கொல்கத்தா
4 - ராஜஸ்தான்
4 - ஹைதராபாத்
3 - பெங்களூர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.