7-வது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றில் பங்குபெறும் சிஎஸ்கே: சாதனை விவரங்கள்

இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிகள், ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்றுள்ளன...
7-வது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றில் பங்குபெறும் சிஎஸ்கே: சாதனை விவரங்கள்

ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி மிகவும் திணறி 7 விக்கெட்டை இழந்து 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கார்லோஸ் சிறப்பாக ஆடி 43 ரன்களைக் குவித்தார்.

4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 67 ரன்களுடன் டுபிளெஸிஸும் 15 ரன்களுடன் தாகுரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டுபிளெஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 14 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை 80 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது. 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 20, 17 ரன்களை சென்னை எடுத்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

7-வது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனை விவரங்கள்:

* சென்னை சூப்பர் கிங்ஸ், டி20 கிரிக்கெட்டில் 9-வது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கிறது. 

இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்

2008: ஐபிஎல்
2010: ஐபிஎல்
2010: சாம்பியன்ஸ் லீக்
2011: ஐபிஎல்
2012: ஐபிஎல்
2013: ஐபிஎல்
2014: சாம்பியன்ஸ் லீக்
2015: ஐபிஎல்
2018: ஐபிஎல்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிகமுறை பங்கேற்ற அணிகள்

சென்னை - 6 (2 வெற்றி)
மும்பை - 4 (3 வெற்றி)
பெங்களூர் - 3 ( 0 வெற்றி)
கொல்கத்தா - 2 (2 வெற்றி)
தில்லி - 1 (1 வெற்றி)
பஞ்சாப் - 1 (0 வெற்றி)
ராஜஸ்தான் - 1 (1 வெற்றி)
புணே - 1 (0 வெற்றி)
ஹைதராபாத் - 1 (1 வெற்றி)
தில்லி - 0

* 9 முறை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி, 7-வது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கிறது. 11 முறை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, 8-வது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ளார். 2017-ல் மட்டும் புணே அணிக்காக இறுதிச்சுற்றில் பங்கேற்றார். மற்ற அனைத்து வருடங்களிலும் சென்னை அணிக்காக இறுதிச்சுற்றில் பங்கேற்றார். 

* தோனி, ரெய்னா ஆகிய இருவருமே 20-வது முறையாக ஐபிஎல் பிளேஆஃப்/அரையிறுதியில் பங்கேற்றுள்ளார்கள். சென்னை அணிக்காக இருவரும் எல்லா வருடங்களிலும் பிளேஆஃப்-பில் விளையாடியுள்ளார்கள். ஆனால் 2016-ல் புணே அணிக்காக தோனி விளையாடியபோதும் 2017-ல் குஜராத் அணிக்காக ரெய்னா விளையாடியபோதும் பிளேஆஃப்-பில் விளையாடமுடியாமல் போனது. 

* இந்த வருட புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 2-ம் இடத்தைப் பிடித்தது. இதுபோல இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிகள், ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்றுள்ளன (2011, 2012, 2013, 2014, 2015). ஆனால், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற அணிகள் இருமுறை மட்டுமே (2008, 2017) சாம்பியன் ஆகியுள்ளன. இந்த அதிர்ஷ்டம், சென்னை அணிக்கு இந்த வருடம் உதவுமா?  

ஐபிஎல் இறுதிச்சுற்றில் சென்னை

2008 - தோல்வி
2010 - வெற்றி
2011 - வெற்றி
2012 - தோல்வி
2013 - தோல்வி
2015 - தோல்வி
2018 - ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com