நான்கு அரை சதங்கள் எடுத்தும் ஆட்ட நாயகன் விருது வாங்காத பிரபல சிஎஸ்கே வீரர்!

இந்த வருடம் இதுவரை ஆட்ட நாயகன் விருது ஒருமுறை கூட ரெய்னாவுக்கு வழங்கப்படவில்லை என்பது விநோதமே...
நான்கு அரை சதங்கள் எடுத்தும் ஆட்ட நாயகன் விருது வாங்காத பிரபல சிஎஸ்கே வீரர்!

இந்த வருட ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணியில் ராயுடு, வாட்சன், தோனி ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிகளுக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள். இவர்கள் மூவரும் 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள்.

அதேசமயம் சுரேஷ் ரெய்னாவும் 400 ரன்களுக்கு அதிகமாக எடுத்து அணிக்குப் பங்களித்துள்ளார். ராயுடு, வாட்சன், தோனி போல அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிகளுக்குப் பெரிதாக உதவாமல் போனாலும் ரெய்னாவின் பங்களிப்பை எவ்விதத்திலும் குறை சொல்லமுடியாது.

ஐபிஎல் 2018 - அதிக ரன்கள் - சிஎஸ்கே

ராயுடு - 586 ரன்கள்
தோனி - 455 ரன்கள்
வாட்சன் - 438 ரன்கள்
சுரேஷ் ரெய்னா - 413 ரன்கள்

அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்களில் ரெய்னா 4-ம் இடத்தைப் பிடித்தாலும் சராசரி ரன்களில் ஷேன் வாட்சனை விடவும் ரெய்னாவே முன்னிலையில் உள்ளார். வாட்சனின் சராசரி - 31.28. ரெய்னா - 37.54.

இந்த வருடம் இதுவரை ஆட்ட நாயகன் விருது ஒருமுறை கூட ரெய்னாவுக்கு வழங்கப்படவில்லை என்பது விநோதமே. காரணம், சிஎஸ்கே அணியில் அதிக அரை சதங்கள் எடுத்தும் இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.

மற்ற எல்லா சிஎஸ்கே வீரர்களை விடவும் ரெய்னா முன்னிலையில் இருப்பது அதிக அரை சதங்களில்தான். 14 ஆட்டங்களில் 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக ராயுடு 1 சதம் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். தோனியும் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். 

ஆனால், சிக்ஸ் அடிப்பதில் மற்ற வீரர்களை விடவும் மிகவும் பின்தங்கியுள்ளார் ரெய்னா.

ஐபிஎல் 2018 - அதிக சிக்ஸர் - சிஎஸ்கே

ராயுடு - 33
தோனி - 30
வாட்சன் - 27
ரெய்னா - 11

2008 முதல் ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ரெய்னா, அனைத்து வருடங்களிலும் குறைந்தபட்சம் 350 ரன்களாவது எடுத்துவிடுகிறார். இந்தப் பெருமை ஐபிஎல்-லில் வேறு எந்த வீரருக்கும் கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com