நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், கேப்டன் ஸ்மித்தின் அபார சதத்தால் ஆஸ்திரேலியா அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றி  பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

சிட்னி: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், கேப்டன் ஸ்மித்தின் அபார சதத்தால் ஆஸ்திரேலியா அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றி  பெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்குபெறுகிறது. தொடரின் முதலாவது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். பிஞ்ச் 'டக் அவுட்டாகி' வெளியேற, வார்னர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னால் ஆட வந்த கேப்டன் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 பந்தில் 14 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 164 ரன்கள் குவித்தார். அவருக்கு பிறகு விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 52 ரன்னும், விக்கெட் கீப்பர் வடே 38 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்தது.

கடினமான வெற்றி  இலக்குடன் நியூசிலாந்து அணி களம் புகுந்தது. மார்ட்டின் கப்தில், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லாதம் 2 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் 9 ரன்கள் எடுத்த நிலையிலும் ஹசில்வுட் பந்தில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிலைத்து விளையாடிய கப்தில் 102 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 114 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்துவந்தஹயாரும் சோபிக்காததால் நியூசிலாந்து அணி 44.2 ஓவர்களில் 256 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com