மேத்யூ வேட் விவகாரம்: மேக்ஸ்வெல்லுக்கு அபராதம்

சகவீரரான மேத்யூ வேட்டை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு அந்நாட்டு அணி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

சகவீரரான மேத்யூ வேட்டை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு அந்நாட்டு அணி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஆனால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படவில்லை.
உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பின்வரிசையில் களமிறக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த மேக்ஸ்வெல், "மேத்யூ வேட்டுக்கு பிறகு நான் களமிறக்கப்பட்டதாலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது' என சாடியிருந்தார்.
இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதைத்தொடர்ந்து மேக்ஸ்வெல், விக்டோரியா அணியின் கேப்டன் மற்றும் சகவீரரான மேத்யூ வேட் ஆகியோரை அவமதித்ததாகக் கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமான் கூறுகையில், "ஊடகங்களிடம் பேசியபோது மேக்ஸ்வெல் அவமதிப்புக்குரிய கருத்தை தெரிவித்தது மிகுந்த ஏமாற்றமளித்தது. அதனால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் இணைந்து இப்போது அபராதம் விதித்திருக்கிறார்கள்' என்றார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறுகையில், "மேக்ஸ்வெலின் கருத்தால் அனைவரும் அதிருப்தியடைந்துள்ளனர். அவர் கூறிய கருத்து, விக்டோரியா அணியின் கேப்டன் மற்றும் மேத்யூ வேட் ஆகியோரை அவமதிக்கும் செயல் என நான் கருதினேன். அதன் காரணமாக அணியின் தலைமைக் குழுவும், நானும் சேர்ந்து மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதித்திருக்கிறோம். இதுவே அவருக்கு போதுமான தண்டனையாகும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com