இரு ஆடுகள முறை: சச்சின் கருத்துக்கு எம்சிசி மறுப்பு

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டிக்கும் இரு ஆடுகளங்களைப் பயன்படுத்தலாம் என்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் யோசனைக்கு மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி)

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டிக்கும் இரு ஆடுகளங்களைப் பயன்படுத்தலாம் என்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் யோசனைக்கு மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) மறுப்பு தெரிவித்துள்ளது.
"ரஞ்சிக் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸை புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் கூக்கர்புர்ரா பந்துகளைக் கொண்டு விளையாட வேண்டும். 2-ஆவது இன்னிங்ஸை, அதற்கு அருகிலேயே சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் எஸ்ஜி டெஸ்ட் பந்தைக் கொண்டு விளையாட வேண்டும்' என்று சச்சின் யோசனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சச்சினின் யோசனைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலான கருத்துக்களை எம்சிசி கூறியுள்ளது.
இதுகுறித்து எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர் ராமீஸ் ராஜா கூறுகையில், "ரஞ்சிக் கிரிக்கெட் போட்டி என்பது, போட்டி அடிப்படையில் சவாலுக்காக ஆடுவது. அதில் இரு ஆடுகள முறையைப் பயன்படுத்துவதென்பது, ரஞ்சிக் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை குறைப்பதாக இருக்கும் என்று எம்சிசி கருதுகிறது' என்றார்.
இதுகுறித்து, அந்தக் கமிட்டி தலைவர் மைக் பிரியர்லே கூறியதாவது:
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டின் ஒரு போட்டியில் இரு ஆடுகளங்களைப் பயன்படுத்துவது குறித்து விவாதித்தோம். ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டானது உண்மையான போட்டியில் ஆடுவதைப் போன்ற உணர்வை தரக்கூடிய ஆட்டமாகும். இரு ஆடுகள முறையை அதில் பயன்படுத்தினால், ரஞ்சிக் கிரிக்கெட்டானது பயிற்சிக்குறியதாக மாறிவிடும். அது, முரண்பாடு மிக்கதாக மாறிவிடும் என்று மைக் பிரியர்லே கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com