மும்பை டெஸ்டில் நடுவரைப் பதம் பார்த்த பந்து! (வீடியோ)

இதனால் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
மும்பை டெஸ்டில் நடுவரைப் பதம் பார்த்த பந்து! (வீடியோ)

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. எனவே, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் வான்கடே டெஸ்டில் இந்தியா களமிறங்கியுள்ளது. மறுமுனையில், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரஹானே, சமிக்குப் பதிலாக ராகுல், புவனேஸ்வர் குமார் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் கீட்டன் ஜென்னிங்ஸ், ஜேக் பால் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். 

49-வது ஓவரில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஜென்னிங்ஸ் அடித்த பந்தை ஃபீல்டிங் செய்த இந்திய வீரர் த்ரோ செய்யும்போது அது நடுவர் பால் ரீஃபிள் தலையில் தவறுதலாகப் பட்டது. இதனால் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி தொடர்ந்து இருந்ததால், அவர் சிகிச்சைக்காக மைதானத்திலிருந்து வெளியேறினார். பிறகு மூன்றாம் நடுவர் எராஸ்மஸ், ஆட்ட நடுவராகப் பணியாற்றினார். ஷம்சுதீன் மூன்றாம் நடுவராக நியமிக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com