யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி இந்தியா சாம்பியன்

பதினெட்டு வயதுக்குள்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி இந்தியா சாம்பியன்

பதினெட்டு வயதுக்குள்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியைத் தோற்கடித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. ஆரம்பம் முதலே வங்கதேசம் முன்னிலை பெறுவதும், பின்னர் இந்தியா ஸ்கோரை சமன் செய்வதுமாக நகர்ந்தது ஆட்டம். 64-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
ஆட்டம் முடிவடைய 20 நொடிகள் மட்டுமே இருந்த நிலையில் அபிஷேக் கோலடிக்க, இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்திய வீரர் ஹார்திக் சிங் ஆட்டநாயகனாகவும், பங்கஜ் குமார் ரசிறந்த கோல் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு
ஆசிய கோப்பை போட்டியில் வாகை சூடிய இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ரா அறிவித்துள்ளார்.
இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது: ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இதயபூர்வமான வாழ்த்துகள். வீரர்களாகிய உங்களை நினைத்து ஹாக்கி இந்தியா பெருமை கொள்கிறது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு தலா ரூ.1 லட்சமும், உதவி அலுவலர்களுக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இதேபோல் ஆசிய கோப்பையின் சிறந்த கோல் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பங்கஜ்குமாருக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com