இன்று நியூஸி.க்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா தோனியின் படை?

இந்தியா-நியூஸிலாந்து இடையேயான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இன்று நியூஸி.க்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா தோனியின் படை?

இந்தியா-நியூஸிலாந்து இடையேயான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் புதன்கிழமை நடைபெறுகிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 2-1 என முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றிவிடும். அதுவே, நியூஸிலாந்து அணி வெற்றி கண்டால், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் தொடரை கைப்பற்றுவதற்காக 5-ஆவது போட்டியில் பலப்பரீட்சை நடத்த வேண்டியிருக்கும்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில், கடந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களுடன் சோபிக்காமல் போன தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் இந்த ஆட்டத்தில் மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஃபார்முக்கு திரும்பியுள்ள கேப்டன் தோனி, அதை தொடர்ந்து தக்கவைத்து நியூஸிலாந்து பந்துவீச்சை பதம் பார்ப்பார் என நம்பலாம். மறுமுனையில், விராட் கோலியும் விட்டுக்கொடுக்காமல் கண்டிப்பாக விளாசுவார் என்றும் எதிர்நோக்கலாம். இவர்களால் மிடில் ஆர்டர் பேட்டிங் பலத்துடன் திகழ்கிறது. மணீஷ் பாண்டேவும் பக்க பலமாக உள்ளார்.
இதுவே பந்துவீச்சில், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, கேதர் ஜாதவ், ஜஸ்பிரீத் பூம்ரா ஆகியோர் வழக்கம்போல நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பும் பணியை சிரத்தையுடன் மேற்கொள்ள உள்ளனர்.
நியூஸிலாந்து அணியைப் பொறுத்த வரையில், தோல்வியில் இருந்து மீண்டு வர முனைப்புடன் செயல்படும்.
ஒரு நாள் தொடரில் தற்போது ஆறுதல் வெற்றியுடன் இருக்கும் அந்த அணி,
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரைக் கைப்பற்ற பெரும் சவாலாக மாறிவிடும்.
அந்த அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், டாம் லதாம் ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களை சோதிப்பர் எனத் தெரிகிறது. கடந்த போட்டியில் கடைசி ஆர்டரில் ஜேம்ஸ் நீஷம், மாட் ஹென்றி ஆகியோர் அடித்து ஆடியதால், இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த முறை சற்று கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. ஹென்றி, செளதி ஆகியோர் பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கின்றனர்.

போட்டி நேரம்:
பிற்பகல் 1.30 மணி
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com