மாநில ரோலர் ஸ்கேட்டிங்: 48 பேர் தேசிய போட்டிக்கு தேர்வு: சென்னை பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

பெரம்பலூரில் நடைபெற்ற மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியிலிருந்து 48 பேர் தேசிய போட்டிக்கு தகுதிபெற்றனர்.
மாநில ரோலர் ஸ்கேட்டிங்: 48 பேர் தேசிய போட்டிக்கு தேர்வு: சென்னை பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

பெரம்பலூரில் நடைபெற்ற மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியிலிருந்து 48 பேர் தேசிய போட்டிக்கு தகுதிபெற்றனர். இந்தப் போட்டியின் பெரும்பாலான பிரிவுகளில் சென்னை பள்ளி
மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் கடந்த 22-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில், மொத்தம் 240 பேர் பங்கேற்றனர்.
அனைத்துப் பிரிவுகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 48 பேர், கர்நாடக மாநிலம், பெல்காமில் டிசம்பர் 21 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் தேசியப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் பீட்டர்சுப்புரெட்டி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குவார்ட் ரிங்- ஆண்கள் பிரிவில்
முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்:
11 வயதுக்குள்பட்டோர்: அப்துல் இர்பான் (சென்னை யூனியன் கிறிஸ்டியன் மெட்ரிக்பள்ளி), ஹர்ஷாக் (கோவை ஜி.ஆர்.ஜி. மெட்ரிக் பள்ளி), சஞ்சய்குரு (சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி).
14 வயதுக்குள்பட்டோர்: ஷ்யாம் கணேஷ் (சென்னை முகப்பேர் ஸ்பார்ட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி), நிஷாந்த் (சென்னை அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிகுலேஷன் பள்ளி), ஜான் அருணோதயம் (சென்னை கொரட்டூர் எபினேசர் மெட்ரிக் பள்ளி).
17 வயதுக்குள்பட்டோர்: சந்துரு (மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி), முகமது அப்பாஸ் (சென்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி), நரேந்தர் (தஞ்சாவூர் டான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளி).
19 வயதுக்குள்பட்டோர்: அனுராக்அன்னடி (சென்னை புரசைவாக்கம் அழகப்பா மெட்ரிக் பள்ளி), ஹிரித்திக்கேஷ் (கோயம்புத்தூர் லிசியேக்ஸ் மெட்ரிக் பள்ளி), பிரதிக் (சென்னை வேலம்மாள் மெட்ரிக் பள்ளி).
குவார்ட் ரிங்-பெண்கள் பிரிவில்
முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள்:
11 வயதுக்குள்பட்டோர்: சாய்லக்னா (சென்னை அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி), அக்க்ஷயா (சென்னை ஸ்பார்ட்டன் மெட்ரிக் பள்ளி), திவ்யபிரபா (நாமக்கல் சில்ட்ரன்ஸ் பார்க் பள்ளி).
14 வயதுக்குள்பட்டோர்: லெமூலா மேரி (சென்னை செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி), சிவஸ்ரீ (திருச்சி செயின்ட் ஜோசப் ஏ.ஐ.ஜி. பள்ளி), வஷிமா (திருச்சி எஸ்.பி.ஐ.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி).
17 வயதுக்குள்பட்டோர்: நித்தியஸ்ரீ (சென்னை முகம்மது சதக் மெட்ரிக் பள்ளி), கிரண் கியாதி (திருச்சி ஸ்ரைன் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி), திவ்யதர்ஷினி (மதுரை எஸ்.டி.ஏ. மெட்ரிக்பள்ளி).
19 வயதுக்குள்பட்டோர்: சவுதாமினி (சென்னை ஜெய்கோபால் கரோடியா மெட்ரிக் பள்ளி), ஹிமா பிந்து (சென்னை சோன் மெட்ரிக் பள்ளி), ரம்யா தீக்ஷிதா (சேலம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி).
இன்லைன்-ஆண்கள் பிரிவில்
முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்:
11 வயதுக்குள்பட்டோர்: சலீத்பவுல் (கோயம்புத்தூர் கார்மெல் கார்டன் மெட்ரிக் பள்ளி), சண்முக குரு பிரசாத் (கோயமுத்தூர் சோமயம்பாளையம் சவேரா வித்யாபவன் மெட்ரிக் பள்ளி), கிஷோர் கிருஷ்ணா (கோயம்புத்தூர் சொக்கம்புதூர் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி).
14 வயதுக்குள்பட்டோர்: சினேகன் (கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி. மெட்ரிக் பள்ளி), அமன்குமார் (சென்னை செயின்ட் ப்ளஸ் எக்ஸ் மெட்ரிக் பள்ளி), லிவ்ஜெய்சல் (மதுரை மகாத்மா காந்தி மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி).
17 வயதுக்குள்பட்டோர்: கிஷோர் வெங்கடேஷ் (சென்னை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி), டேனியல் சாம்சன் (சென்னை எம்.சி.சி. கேம்பஸ் மெட்ரிக் பள்ளி), நித்திஷ் விஜய் (மதுரை வேலம்மாள் மெட்ரிக் பள்ளி).
19 வயதுக்குள்பட்டோர்: தர்ஷன்
(சென்னை சித்தலப்பாக்கம் என்.எஸ்.என். மெட்ரிக் பள்ளி), தக்ஷன் (கோயம்புத்தூர் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக்பள்ளி), அஜய் (பெருந்துறை சாகர் வித்யாபவன் மெட்ரிக் பள்ளி).
இன்லைன்: பெண்கள் பிரிவில்
முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள்:
11 வயதுக்குள்பட்டோர்: சஸ்திகா (திருப்பூர் தி ப்ரன்ட்லைன் அகாதெமி மெட்ரிக் பள்ளி), வெர்லி (கோயம்புத்தூர் சிந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி), சக்தி (சென்னை சி.எஸ்.ஐ. இவார்ட் மெட்ரிக் பள்ளி).
14 வயதுக்குள்பட்டோர்: மீனலோஷினி (சென்னை செயின்ட் மைக்கேல்ஸ் அகாதெமி பள்ளி), மோனிஷா சித்தார்தனா (சென்னை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி), ராணி (சென்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி).
17 வயதுக்குள்பட்டோர்: நேத்திரா (சென்னை சீதாதேவி கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி), மதுலிகா (சென்னை எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக் பள்ளி), சர்மதா (திருப்பூர் தி ப்ரன்ட்லைன் அகாடெமி மெட்ரிக் பள்ளி).
19 வயதுக்குள்பட்டோர்: மிருதுபாஷினி (திருச்சி செயின் ஜான்ஸ் வெஸ்லி மெட்ரிக் பள்ளி), வாசுகி (திருநெல்வேலி ஸ்ரீ ஜெயேந்திரா எஸ்.எஸ்.ஜி.ஏ. மெட்ரிக் பள்ளி), அமிர்தா (மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் பள்ளி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com