இந்திய டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு: முதல் டெஸ்டில் ஆண்டர்சன் இல்லை

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு: முதல் டெஸ்டில் ஆண்டர்சன் இல்லை

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் தோள்பட்டை காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 473 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஆண்டர்சன் 2-ஆவது டெஸ்டில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அதே அணியே இந்தியத் தொடரிலும் விளையாடும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியத் தொடரில் ஓரிரு போட்டிகளிலாவது ஆண்டர்சனால் விளையாட முடியும் என நம்புகிறோம்' என தெரிவித்துள்ளது. ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவன் ஃபின், ஜேக் பால் ஆகிய 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 9-ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. 2-ஆவது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும், 3, 4, 5-ஆவது டெஸ்ட் போட்டிகள் முறையே மொஹாலி, மும்பை, சென்னை நகரங்களிலும் நடைபெறுகின்றன.
அணி விவரம்: அலாஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜாபர் அன்சாரி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், கேரி பேலன்ஸ், கேரத் பட்டி, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், ஸ்டீவன் ஃபின், ஹஸீப் ஹமீது, ஆதில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com