சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா: புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது.
இதன்மூலம் 4 வெற்றி, ஒரு டிராவைப் பதிவு செய்த இந்திய அணி 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மலேசியாவும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின்

12-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதை அற்புதமாக கோலாக்கினார் ரூபிந்தர் சிங்.
இதன்பிறகு 14-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அதை நிகின் திம்மையா கோட்டைவிட்டார். 17-ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் வாய்ப்பை இந்தியா கோட்டைவிட,18-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது மலேசியா.
ஆட்டம் முடிவடைய இரு நிமிடங்களே இருந்த நிலையில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரூபிந்தர் சிங் 2-ஆவது கோலை அடிக்க, இந்தியா 2-1என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
தென் கொரியா வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா 4-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தற்போதைய நிலையில் இந்தியா, மலேசியா, தென் கொரியாஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
வியாழக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், சீனாவையும், தென் கொரியா, மலேசியாவையும் சந்திக்கின்றன. பாகிஸ்தான்-சீனா இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிஅரையிறுதிக்கு முன்னேறும். மலேசியா-தென் கொரியா இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தைப் பிடிக்கும். மேற்கண்ட இரு ஆட்டங்களின் முடிவைப்பொறுத்தே இந்தியாவுடன் அரையிறுதியில் மோதும் அணி முடிவு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com