டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் தொடர்ந்து முதலிடம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பெளலர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் தொடர்ந்து முதலிடம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பெளலர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
அவர் 900 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் (878) 2-ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (861) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா 805 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் 3 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 3-ஆவது இடத்தில் உள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் அஜிங்க்ய ரஹானே 825 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளார். புஜாரா, கோலி ஆகியோர் முறையே 15 மற்றும் 17-ஆவது இடங்களில் உள்ளனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com