பிரெஞ்சு ஓபன் சிந்து அதிர்ச்சித் தோல்வி

பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
பிரெஞ்சு ஓபன் சிந்து அதிர்ச்சித் தோல்வி

பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 2-ஆவது சுற்றில் சிந்து 20-22, 17-21 என்ற நேர் செட்களில் சீனாவின் ஹீ பிங்ஜியாவிடம் தோல்வி கண்டார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபனில் 2-ஆவது சுற்றோடு வெளியேறிய நிலையில், இப்போது பிரெஞ்சு ஓபனிலும் அதே 2-ஆவது சுற்றோடு வெளியேறியிருக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 19-21, 16-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சீன தைபேவின் செள டியென் சென்னிடம் தோல்வி கண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com