ஆசிய ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்

ஆசிய ஜூனியர் (19 வயதுக்குள்பட்டோருக்கானது) ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆசிய ஜூனியர் (19 வயதுக்குள்பட்டோருக்கானது) ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த வேலவன் 12-14, 9-11, 11-6, 11-8, 11-7 என்ற செட் கணக்கில் ஜோர்டானின் முகமது அல் சராஜை தோற்கடித்தார்.
இதன்மூலம் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 2-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முதல் இந்தியர் ரவி தீட்சித் ஆவார். அவர் 2010-இல் இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com