கான்பூர் டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.
வில்லியம்சனை வீழ்த்திய அஸ்வினை பாராட்டும் சகவீரர்கள்.
வில்லியம்சனை வீழ்த்திய அஸ்வினை பாராட்டும் சகவீரர்கள்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.
434 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 341 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 6 விக்கெட்டுகளே உள்ளதால் அந்த அணியின் தோல்வி உறுதியாகியுள்ளது.
கான்பூரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 318 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 65, புஜாரா 62, ஜடேஜா 42 ரன்கள் எடுத்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், மிட்செல் சேன்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணி 95.5 ஓவர்களில் 262 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 75, டாம் லதாம் 58 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 47 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் 64, புஜாரா 50 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
புஜாரா 78: 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 185 ரன்களை எட்டியபோது முரளி விஜயின் விக்கெட்டை இழந்தது. அவர் 170 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் நடையைக் கட்ட, புஜாரா 78 ரன்களில் (152 பந்துகளில்) ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்தார் ரோஹித் சர்மா. இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்தது. ரஹானே 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
377 ரன்களில் டிக்ளேர்: இதன்பிறகு ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. ரோஹித் சர்மா 75 பந்துகளில் அரை சதத்தை எட்ட, மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜடேஜா 58 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதையடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி. அப்போது இந்தியா 107.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்திருந்தது.
ரோஹித் சர்மா 93 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 68, ரவீந்திர ஜடேஜா 58 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரோஹித்-ஜடேஜா ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் சேன்ட்னர், ஐஸ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
நியூஸிலாந்து-93/4: இதையடுத்து 434 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்டில் ரன் ஏதுமின்றியும், டாம் லதாம் 2 ரன்களிலும் அஸ்வின் வீசிய 4-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து கேப்டன் வில்லியம்சனுடன் இணைந்தார் டெய்லர். இந்த ஜோடியையும் அஸ்வின் நிலைக்க விடவில்லை. 18-ஆவது ஓவரை வீசிய அஸ்வின், வில்லியம்சனை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். 59 பந்துகளைச் சந்தித்த வில்லியம்சன் 25 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு லியூக் ரோஞ்சி களமிறங்க, உமேஷ் யாதவின் துல்லியமான "த்ரோ'வில் ரன் அவுட்டானார் டெய்லர். அவர் 17 ரன்கள் எடுத்தார். 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 37 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. ரோஞ்சி 38, சேன்ட்னர் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்டில் 200 விக்கெட்: வரலாறு படைத்தார் அஸ்வின்
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 200-ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இது அவருடைய 37-ஆவது போட்டியாகும்.
இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக ஹர்பஜன் சிங் 46 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தியதே இந்தியர் ஒருவரின் சாதனையாக இருந்தது. இதேபோல் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 50, 100, 150-ஆவது விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் வரிசையிலும் அஸ்வினே முதலிடத்தில் உள்ளார்.
இதுதவிர சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட் (36 போட்டி) உள்ளார்.
200 விக்கெட் வீழ்த்தியது குறித்துப் பேசிய அஸ்வின், "200 விக்கெட் என்பது மிகச்சிறப்பான ஒன்றாகும். கேன் வில்லியம்சன் விக்கெட் மிக முக்கியமானதாகும். முதல் இன்னிங்ஸிலும் கேன் வில்லியம்சன் துல்லியமான ஒரு பந்தில்தான் ஆட்டமிழந்தார். வருங்காலத்தில் இதேபோன்று முக்கிய விக்கெட்டுகளை அதிகளவில் வீழ்த்துவேன் என நம்புகிறேன்' என்றார்.

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்


இந்தியா-318 (முரளி விஜய் 65, புஜாரா 62,
ஜடேஜா 42*, டிரென்ட் போல்ட் 3வி/67,
மிட்செல் சேன்ட்னர் 3வி/94).
நியூஸிலாந்து-262 (கேன் வில்லியம்சன் 75,
டாம் லதாம் 58, ஜடேஜா 5வி/73, அஸ்வின் 4வி/93).

2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா


 கே.எல்.ராகுல் (சி) டெய்லர் (பி) சோதி 38 (50)
முரளி விஜய் எல்பிடபிள்யூ(பி) சேன்ட்னர் 76 (170)
புஜாரா (சி) டெய்லர் (பி) சோதி 78 (152)
விராட் கோலி (சி) சோதி (பி) கிரேக் 18 (40)
ரஹானே (சி) டெய்லர் (பி) சேன்ட்னர் 40 (81)
ரோஹித் சர்மா நாட் அவுட் 68 (93)
ஜடேஜா நாட் அவுட் 50 58

விக்கெட் வீழ்ச்சி: விக்கெட் வீழ்ச்சி: 1-52 (ராகுல்), 2-185 (விஜய்), 3-214 (கோலி), 4-228 (புஜாரா), 5-277 (ரஹானே).


பந்துவீச்சு: டிரென்ட் போல்ட் 9-0-34-0, மிட்சேல் சேன்ட்னர்
32.2-11-79-2, மார்க் கிரேக் 23-3-80-1, நீல் வாக்னர் 16-5-52-0, ஐஸ் சோதி 20-2-99-2, மார்ட்டின் கப்டில் 4-0-17-0,
கேன் வில்லியம்சன் 3-0-7-0.

நியூஸிலாந்து


டாம் லதாம் எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 2 (15)
மார்ட்டின் கப்டில் (சி) விஜய் (பி) அஸ்வின் 0 (5)
கேன் வில்லியம்சன் எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 25 (59)
ராஸ் டெய்லர் ரன் அவுட் (உமேஷ்) 17 (36)
லியூக் ரோஞ்சி நாட் அவுட் 38 (58)
மிட்செல் சேன்ட்னர் நாட் அவுட் 8 (50)

விக்கெட் வீழ்ச்சி: 1-2 (கப்டில்), 2-3 (லதாம்),
3-43 (வில்லியம்சன்), 4-56 (டெய்லர்).


பந்துவீச்சு: முகமது சமி 4-2-6-0, அஸ்வின் 16-1-68-3,
ரவீந்திர ஜடேஜா 14-10-8-0, உமேஷ் யாதவ் 3-0-9-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com