கொல்கத்தா டெஸ்டில் அஸ்வின் விளையாடுவாரா? 

கொல்கத்தா டெஸ்டை முன்னிட்டு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கோலி.
கொல்கத்தா டெஸ்டில் அஸ்வின் விளையாடுவாரா? 

சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் இந்திய அணிக்குத் தேர்வானபோது பலருக்கும் இந்தச் சந்தேகம் வந்தது. அஸ்வினுக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று ஏற்படாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளாரா என்று!

கொல்கத்தா டெஸ்டை முன்னிட்டு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கோலி. அப்போது அவரிடம் அஸ்வின் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கோலி பதிலளித்ததாவது: 

அஸ்வின் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். அஸ்வினுக்கு மாற்றாக ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை. இஷாந்த்துக்கு உடல்நலக் குறைவு. ஏற்கெனவே அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். மேலும் நியூசிலாந்து அணியில் ஐந்து இடக்கை பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். எனவே ஒரு ஆஃப் ஸ்பின்னரைத் தேர்வு செய்தோம் என்றார். இதனையடுத்து நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவது உறுதியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com