இந்திய ஓபன்: சிந்து சாம்பியன்

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதி ஆட்டம் சிறப்பான ஒன்று. அதில், முதல் செட்டை வென்றது திருப்புமுனையாக அமைந்தது. எனது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. -பி.வி.சிந்து.
இறுதி ஆட்டம் சிறப்பான ஒன்று. அதில், முதல் செட்டை வென்றது திருப்புமுனையாக அமைந்தது. எனது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. -பி.வி.சிந்து.

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சிந்து 21-19, 21-16 என்ற நேர் செட்களில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை தோற்கடித்தார்.
இந்திய ரசிகர்களின் பெரும் ஆதரவுக்கு மத்தியில் இறுதிச் சுற்றில் களமிறங்கிய சிந்து ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். அதிவேக ஷாட்களை ஆடிய சிந்து, முதல் செட்டின் ஆரம்பத்திலேயே 6-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட கரோலினா, மெதுவாக பின்னடைவிலிருந்து மீண்டார்.
ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய இருவரும் 16-16 என சமநிலையில் இருந்தனர். இதன்பிறகு 19-18 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற கரோலினா, ஒரு ஷாட்டை கோட்டைவிட்டார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிந்து முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் ஆரம்பத்தில் சிந்து 4-0 என முன்னிலை பெற, பின்னர் கரோலினா சரிவிலிருந்து மீண்டார். ஆனால் விடாப்பிடியாக போராடிய சிந்து அந்த செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
ஆக்ùஸல்சன் சாம்பியன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த ஆக்ùஸல்சன் தனது இறுதிச் சுற்றில் 21-13, 21-10 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் டியென் சென் செளவை தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர்: ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி-கெவின் சஞ்சயா ஜோடி 21-11, 21-15 என்ற நேர் செட்களில் சகநாட்டவர்களான ரிக்கி-பிரத்தமா ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.
மகளிர் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் ஷிஹோ டனாகா-கோஹரு யோனேமோட்டோ ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் 16-21, 21-19, 21-10 என்ற செட் கணக்கில் சகநாட்டவர்களான நோகோ ஃபுகுமான்-குரூமி யோனாவ் ஜோடியைத் தோற்கடித்தது.
கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவின் ஷிவெய் ஜெங்-கிங்சென் ஜோடி 22-24, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் சகநாட்டவர்களான லூ கெய்-ஹுயாங் யாகியோங் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com