கொல்கத்தா அபார வெற்றி; 49 ரன்களில் சுருண்டது பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
கொல்கத்தா அபார வெற்றி; 49 ரன்களில் சுருண்டது பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த கொல்கத்தாவின் இன்னிங்ûஸ சுநீல் நரேனும், கௌதம் கம்பீரும் தொடங்கினர். சாமுவேல் பத்ரீ வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட நரேன், அதில் 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விரட்ட, அந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்தன.
டைமல் மில்ஸ் வீசிய அடுத்த ஓவரில் கம்பீர் ஒரு சிக்ஸரை விரட்ட, அரவிந்த் வீசிய 3-ஆவது ஓவரில் நரேன் இரு பவுண்டரிகளை விளாசினார். இதனால் 3 ஓவர்களில் 39 ரன்களை எட்டியது கொல்கத்தா.
டைமல் மில்ஸ் வீசிய 4-ஆவது ஓவரில் கம்பீர் 14 ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தாவின் சரிவு ஆரம்பமானது. அவரைத் தொடர்ந்து சுநீல் நரேன் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்து ஸ்டூவர்ட் பின்னி பந்துவீச்சில் யுவேந்திர சாஹலிடம் கேட்ச் ஆனார்.
இதன்பிறகு உத்தப்பா 11, யூசுப் பதான் 8, மணீஷ் பாண்டே 15, டி கிராண்ட்ஹோம் 0, கிறிஸ் வோக்ஸ் 18, கோல்ட்டர் நைல் 2, சூர்யகுமார் யாதவ் 15, குல்தீப் யாதவ் 4 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற, 19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது கொல்கத்தா.
பெங்களூர் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டைமல் மில்ஸ், பவன் நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பெங்களூர் தோல்வி: பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாக, அந்த அணியின் சரிவு ஆரம்பமானது. இறுதியில் பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 9 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி, டிவில்லியர்ஸ், கேதார் ஜாதவ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கோல்ட்டர் நைல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

துளிகள்...

*ஐபிஎல் வரலாற்றில் ஓர் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகளும் வீழ்ந்தது இது 2-ஆவது முறையாகும்.
*பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இன்றைய ஆட்டம்

மும்பை-புணே
இடம்: மும்பை
நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com