பஞ்சாபுக்கு 3-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ûஸ தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
பஞ்சாபுக்கு 3-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ûஸ தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

அந்த அணியின் தொடக்க வீரர் ஹஷிம் ஆம்லா 40 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்தார்.
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 3-ஆவது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் அணி, புள்ளிகள் பட்டியில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியது. அதேநேரத்தில் 5-ஆவது தோல்வியை சந்தித்த குஜராத் அணி தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணியில் ஆம்லா முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசி அதிரடியில் இறங்க, அடுத்த ஓவரில் மனன் வோரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த ஷான் மார்ஷ் பவுண்டரியை விரட்டி ரன் கணக்கைத் தொடங்கினார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய ஆம்லா, ஆண்ட்ரூ டை வீசிய 6-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். ஷான் மார்ஷும் அதிரடியாக ஆட, 9 ஓவர்களில் 80 ரன்களை எட்டியது பஞ்சாப்.
ஆண்ட்ரூ டை வீசிய அடுத்த ஓவரில் மார்ஷ் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது.
இதன்பிறகு கேப்டன் மேக்ஸ்வெல் களமிறங்க, ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 30 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ஆம்லா. அகர்வால் வீசிய 14-ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் இரு சிக்ஸர்களை விளாச, அதே ஓவரில் ஆம்லா ஆட்டமிழந்தார். அவர் 40 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.
அவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31, மார்கஸ் ஸ்டானிஸ் 7 ரன்களில் வெளியேறினர். கடைசிக் கட்டத்தில் அக்ஷர் படேல் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34, ரித்திமான் சாஹா 10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.
குஜராத் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 ஓவர்களில் 35 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
குஜராத் தோல்வி: பின்னர் ஆடிய குஜராத் அணியில் பிரென்டன் மெக்கல்லம் 6 ரன்களில் நடையைக் கட்ட, ஆரோன் ஃபிஞ்சுடன் இணைந்தார் கேப்டன் சுரேஷ் ரெய்னா. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஃபிஞ்ச் 13 ரன்களில் வெளியேற, ரெய்னா 24 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்தவர்களில் தினேஷ் கார்த்திக் ஒருபுறம் சிறப்பாக ஆட, மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா 9, டுவைன் ஸ்மித் 4, ஆகாஷ்தீப் நாத் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 13.1 ஓவர்களில் 102 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத்.
இதையடுத்து களம்கண்ட ஆண்ட்ரூ டை 12 பந்துளில் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பாசில் தம்பி களம்புகுந்தார். இதனிடையே தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் அரை சதம் கண்டார்.
இதன்பிறகு குஜராத்தின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் நடராஜன், மோஹித் சர்மா, சந்தீப் சர்மா ஆகியோர் அபாரமாக பந்துவீச, தினேஷ் கார்த்திக்கால் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
தினேஷ் கார்த்திக் 44 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 58, பாசில் தம்பி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா, கரியப்பா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆம்லா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினேஷ் கார்த்திக் 100

பஞ்சாப் வீரர் மனன் வோராவின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் 100 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார் குஜராத்தின் தினேஷ் கார்த்திக்.

புள்ளிகள் பட்டியல்

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளி
மும்பை 7 6 1 12
கொல்கத்தா 7 5 2 10
ஹைதராபாத் 7 4 3 8
பஞ்சாப் 7 3 4 6
புணே 6 3 3 6
டெல்லி 6 2 4 4
குஜராத் 7 2 5 4
பெங்களூர் 7 2 5 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com