ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர்

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால் சாந்து ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால் சாந்து ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
19-ஆவது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
இதில் ஆடவர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஈரானின் சோஹைல் ஷாமெலியை 11-1, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். போட்டித் தரவரிசையின்படி, வேலவன் தனது 2-ஆவது சுற்றில் பாகிஸ்தானின் ஃபர்ஹான் ஸமனுடன் மோதுவதாக இருந்தது.
ஆனால், நுழைவு இசைவு (விசா) பிரச்னை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதை அடுத்து, வேலவன் செந்தில்குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே, மற்றொரு இந்தியரான ஹரிந்தர் பால் சாந்து தனக்கான சுற்றில் பிலிப்பின்ஸின் ரெய்மார்க் பெகோர்னியாவை 11-1, 11-5, 11-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதனிடையே , இந்திய வீரர் ஆதித்யா ஜகதாப், மலேசியாவின் முகமது நஃபிஸ்வானிடம் 5-11, 6-11, 8-11 என்ற செட் கணக்கில் தோற்றார்.
மகளிர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் சுனன்யா குருவில்லா, 11-4, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் கொரியாவின் கோ யுராவை வீழ்த்தினார். எனினும், மற்றொரு வீராங்கனையான லக்ஷயா, போட்டித் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருக்கும் மலேசியாவின் ஃபு úஸா யுக் ஹானால் 9-11, 11-4, 9-11, 11-6 என்ற செட் கணக்கில் தோற்கடிக்கப்பட்டார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சச்சிகா இங்கலேவை 11-7, 11-6, 7-11, 11-13, 13-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் மலேசியாவின் அய்ஃபா ஸமன்.
பாகிஸ்தான் புகார்
நுழைவு இசைவு (விசா) அனுமதி பிரச்னை காரணமாக பாகிஸ்தான் அணியினர் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இயலாமல் போனது.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு உரிய நேரத்தில் நுழைவு இசைவு அளிக்காமல் வேண்டுமென்றே இந்தியா தாமதம் செய்ததாக உலக மற்றும் ஆசிய ஸ்குவாஷ் சங்கங்களில் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com