சதமடித்த தவன்: வெளிநாடுகளில் சாதிக்கும் வீரர்!

ஷிகர் தவன் - 6 வது சதம். அவற்றில் 5 சதங்கள் வெளிநாடுகளில் எடுத்தவை...
சதமடித்த தவன்: வெளிநாடுகளில் சாதிக்கும் வீரர்!

இந்தியா-இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன், 119 ரன்கள் எடுத்தார்.

இதனை முன்வைத்து அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

* ஷிகர் தவன் - 6 வது சதம். அவற்றில் 5 சதங்கள் வெளிநாடுகளில் எடுத்தவை. 

ஆசியாவில்: 5 சதங்கள் 19 இன்னிங்ஸில்
ஆசியாவுக்கு வெளியே: 1 சதம் 24 இன்னிங்ஸில்

* ஷிகர் தவன் தன்னுடைய அதிவேக அரை சதத்தை இந்தப் போட்டியில் எட்டியுள்ளார். இதற்கு முன்பு 2015-ல், வங்கதேசத்துக்கு எதிராக 47 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இந்தப் போட்டியில் 45 பந்துகளில் அரை சதம் எடுத்துள்ளார்.

ஒரு டெஸ்ட் தொடரில் 100 + ஸ்டிரைக் ரேட் உள்ள இந்தியர்கள் ( 250+ பந்துகள்)

108.14 சேவாக் vs இலங்கை 2009
107.35 கபில் தேவ் vs இங்கிலாந்து 1982
104.67 தவன் vs இலங்கை 2017 

* 2011 இங்கிலாந்துக்கு எதிராக டிராவிட் அடித்த சதங்களுக்குப் பிறகு வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் தொடரில் இரு சதங்கள் எடுத்த தொடக்க வீரர், தவன்.  

இந்திய தொடக்க வீரர்கள்: வெளிநாடுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் இரு சதங்கள் அல்லது அதற்கு மேலும் எடுத்தவர்கள்

மண்கட்
கவாஸ்கர் (5 தடவை)
சாஸ்திரி
டிராவிட் (2 தடவை)
கம்பீர்
சேவாக்
தவன்

இலங்கையில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்கள்

335 - அட்டபட்டு - ஜெயசூர்யா

193 - அட்டபட்டு - ஜெயசூர்யா 

188 - தவன் - ராகுல்

இலங்கைக்கு எதிராக இலங்கையில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்கள்

188 தவன் - ராகுல் 2017
171 சித்து - பிரபாகர், 1993
167 கம்பீர் - சேவாக், 2008

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com