மான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர்

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஃபெடரர் தனது காலிறுதியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட்டை தோற்கடித்தார்.
1 மணி, 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்ட ரோஜர் ஃபெடரர், தனது முதல் சர்வீஸின் மூலம் 81 சதவீத புள்ளிகளைப் பெற்றார். அகுட்டுக்கு எதிராக தொடர்ச்சியாக 7-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார் ஃபெடரர்.
வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், "இந்த ஆட்டத்தில் பந்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தாலும், மீண்டும் ஒரு முறை சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாக நினைக்கிறேன்' என்றார்.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஃபெடரர், தனது அரையிறுதியில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியை சந்திக்கிறார். ராபின் ஹேஸி தனது காலிறுதியில் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மானை தோற்கடித்தார்.
மற்றொரு காலிறுதியில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஷபோவெலாவ், இந்தப் போட்டியில் நடால் உள்ளிட்ட 4 முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷபோவெலாவ் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்திக்கிறார். ஸ்வெரேவ் தனது காலிறுதியில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்தார்.
20 வயதான ஸ்வெரேவ் தரவரிசையில் முதல் 20 இடங்களைப் பிடித்த இளம் வீரர் என்றால், அரையிறுதியில் அவருடன் மோதவிருக்கும் ஷபோவெலாவ், ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com