இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த மாத கடைசியில் கவுன்டி கிரிக்கெட்டில் களமிறங்குகிறார்.
2018-இல் இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட அஸ்வின் முடிவு செய்துள்ளார். அவர் வார்செஸ்டர்ஷையர் அணிக்காக களமிறங்குகிறார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்டதால் புஜாரா மீண்டும் கவுன்டி கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார். புஜாரா நாட்டிங்காம்ஷையர் அணிக்கு விளையாடுகிறார்.