புரோ கபடி: புணேரி பால்டானுக்கு 4-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் அணி 47-42 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியைத் தோற்கடித்தது.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் அணி 47-42 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியைத் தோற்கடித்தது.

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள புணேரி பால்டான் அணி, 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள பாட்னா பைரேட்ஸ் அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெüவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதேல அபாரமாக ஆடிய புணேரி பால்டான் அணி 14 நிமிடங்களில் 22-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதேநேரத்தில் புணேரி பால்டான் ரைடர்களை பிடிக்க முடியாமல் பாட்னா பின்கள வீரர்கள் திணறினர். பிரதீப் நர்வாலின் ரைடால் சில புள்ளிகளைப் பெற்ற பாட்னா அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 13-25 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே பாட்னாவை ஆல் அவுட்டாக்கிய புணேரி பால்டான், 28-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து அபாரமாக ஆடிய புணேரி பால்டான் 30 நிமிடங்களின் முடிவில் 36-24 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
கடைசி நேரத்தில் அபாரமாக ரைடு சென்றதோடு, அற்புதமான டேக்கிள்கள் மூலம் புணேரி பால்டானை திணறடித்தது பாட்னா பைரேட்ஸ். எனினும் அந்த அணியால் மோசமான தோல்வியிலிருந்து தப்ப முடிந்ததே தவிர, வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் புணேரி பால்டான் 47-42 என்ற கணக்கில் வெற்றி கண்டது.
பாட்னா ரைடர் பிரதீப் நர்வால் தனது சிறப்பான ரைடின் மூலம் 19 புள்ளிகளைப் பெற்றபோதிலும், அந்த அணியால் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.
ஜெய்ப்பூர் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 24-22 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியைத் தோற்கடித்தது. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் அணி 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள யு.பி.யோதா அணி 4-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
இன்று விடுமுறை: திங்கள்கிழமை ஆட்டம் எதுவும் கிடையாது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸýம், புணேரி பால்டானும் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் யு.பி.யோதாவும், பெங்கால் வாரியர்ஸýம் மோதுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com