செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

*இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஜூட் ஃபெலிக்ஸ் செபாஸ்டியன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
*அர்ஜுனா விருதானது தற்போது தனது மதிப்பை இழந்துவிட்டதாக இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் அசோக் சிங் உள்ளிட்ட அர்ஜுனா விருது வென்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அது ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
*ஜூனியர் பாட்மிண்டன் ஆசிய கோப்பை, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்திய அணி, உலகின் முதல் நிலை வீராங்கனையான லக்ஷயா சென் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
*பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ) அறிவுறுத்தலின் பேரில் 12 மாநில கிரிக்கெட் சங்கங்கள் மட்டுமே தங்களது வாக்களிக்கும் உறுப்பினர்கள் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 15 கிரிக்கெட் சங்கங்கள் அந்தப் பட்டியலை சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*தென் ஆப்பிரிக்க 'ஏ' அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய 'ஏ' அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதை அடுத்து, 2 போட்டிகளை கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர், 1-1 என்று சமன் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com