2-ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து-223/7

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 62.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்துள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 62.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்துள்ளது. 
இங்கிலாந்தின் லீட்ஸில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் அலாஸ்டர் குக் 11, வெஸ்ட்லே 3, ஸ்டோன்மேன் 19, மாலன் 8 ரன்களில் ஆட்டமிழக்க, 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 
இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் பென் ஸ்டோக்ஸ். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி மோசமான நிலையில் இருந்து மீண்டது. ஜோ ரூட் 98 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 2 ரன்களில் நடையைக் கட்ட, மொயீன் அலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி 62.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 88, கிறிஸ் வோக்ஸ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஜோ ரூட் சாதனை: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்தப் போட்டியில் 59 ரன்கள் குவித்ததன் மூலம் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் குவித்தவரான தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com