இந்திய அணியில் மாற்றங்கள் தொடரும்: ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் 

இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றங்கள் தொடரும். ஆட்டத்தின் போது  நடக்கும் தவறுகள் சரிசெய்யப்படும் என ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், சனிக்கிழமை  தெரிவித்தார்.
இந்திய அணியில் மாற்றங்கள் தொடரும்: ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் 

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது ஒருநாள் போட்டி பல்லகெலே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2-ஆவது ஒருநாள் போட்டியின் போது புது முயற்சியாக கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ராகுல் ஆகியோர் விராட் கோலிக்கு முன்பாகவே களமிறக்கப்பட்டனர். ஆனால் கோலி உட்பட அனைவரும் சொதப்பினர்.

இதனால் இந்திய அணி திணறியது. பின்னர் புவனேஸ்வர் குமாருடன் ஜோடி சேர்ந்த தோனி, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிபெற வைத்தார்.

இந்நிலையில், 3-ஆவது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் நமது இந்திய அணி, ஃபீல்டிங்கில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக எதிரணி வீரர்கள் பலரை ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்கின்றனர். டெஸ்ட் அணி தற்போது ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. அதுபோல ஒருநாள் அணியும் அமைய வேண்டும். அவ்வப்போது நிகழும் சில தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும். 

அதற்காக பயிற்சியாளர்கள் குழு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. களமிறங்கும் 11 பேர் கொண்ட அணி எப்போதும் வலுவானதாக இருக்க வேண்டும். அதற்காக தற்போது சில மாற்றங்களும், சோதனை முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது. அப்போதுதான் தவறுகளை சரிசெய்துகொள்ள முடியும். 

அனைத்திலும் வலுவானதாக இருக்க முடியும். இந்த சோதனைகளால் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. அனைவருக்கும் சரியான வாய்ப்பளித்து பரிசோதிக்கப்படுவர்.

கடந்த போட்டிகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டிகளில் களமிறங்க வேண்டும். அப்போதுதான் இந்திய கிரிக்கெட் அணியால் நீண்ட காலம் சிறந்த அணியாக விளங்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com