பிராட்மேன், லாரா, சச்சினை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி சாதனை!

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி புது சாதனைப் படைத்துள்ளார்.
பிராட்மேன், லாரா, சச்சினை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி சாதனை!

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், விராட் கோலி ஜோடி  3- வது விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது.

முதல்நாள் ஆட்டநேர இறுதியில் முரளி விஜய், 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது கோலி 156 ரன்களுடன் களத்தில் நின்றார்.

இதையடுத்து 2-ஆம் நாளில் தொடர்ந்து பேட் செய்த விராட் கோலி, இரட்டைச் சதம் விளாசினார். மேலும், நடப்புத் தொடரிலேயே அடுத்தடுத்து 2 இரட்டைச் சதங்களை விளாசி புது சாதனையும் படைத்தார்.

2016-ம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதம் காணாத விராட் கோலி, அதன்பிறகு மட்டும் 6 இரட்டைச் சதங்களை விளாசியுள்ளார். மேலும், பிராட்மேன், சச்சின், லாரா போன்ற ஜாம்பவான் வீரர்களின் சாதனைகளையும் தகர்த்துள்ளார். 

இதன்மூலம் விராட் கோலி செய்த சாதனைத் துளிகளின் விவரங்கள் பின்வருமாறு:

ஒரே ஆண்டில் அதிக இரட்டைச் சதம் (3 இரட்டைச் சதங்கள்)

1930 - டான் பிராட்மேன்
2003 - ரிக்கி பாண்டிங்
2012 - மைக்கெல் கிளார்க்
2014 - பிரண்டன் மெக்கல்லம்
2016, 2017 - விராட் கோலி

இதில் விராட் கோலி மட்டும் தான் இந்தச் சாதனையை இருமுறைச் செய்துள்ளார். அதுவும் அடுத்தடுத்த வருடங்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளின் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் இரட்டைச் சதம் அடித்தவர்கள்:

1928-29, 1933 - வி.ஹம்மாந்த்
1934 - டான் பிராட்மேன்
1993 - வினோத் காம்ப்ளி
2007 - குமார சங்ககாரா
2012 - மைக்கெல் கிளார்க்
2017 - விராட் கோலி

அதிக இரட்டைச் சதம் அடித்த இந்தியர்கள்:

சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், விராட் கோலி - 6 
ராகுல் டிராவிட் - 5 
சுனில் கவாஸ்கர் - 4
சேத்தேஷ்வர் புஜாரா - 3

அதிக இரட்டைச் சதம் அடித்த கேப்டன்கள்:

விராட் கோலி - 6
பிரையன் லாரா - 5
டான் பிராட்மேன், க்ரீம் ஸ்மித், மைக்கெல் கிளார்க் - 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com