ஆண்டர்சன், வோக்ஸ் ஆக்ரோஷத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்து வெற்றி பெற 354 ரன்கள் இலக்கு!

தல் இன்னிங்ஸில் 215 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் 138 ரன்களுக்குச் சுருண்டுள்ளது...
ஆண்டர்சன், வோக்ஸ் ஆக்ரோஷத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்து வெற்றி பெற 354 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெல்ல 354 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் 138 ரன்களுக்குச் சுருண்டுள்ளது.

அடிலெய்டில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் நாதன் லயன் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஓவர்டன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸில் எதிர்பாராதவிதமாக 138 ரன்களுக்குச் சுருண்டுள்ளது. அந்த அணியில் ஒருவர் கூட 20 ரன்னைத் தாண்டி எடுக்கவில்லை. அதிகபட்சமாக கவாஜா, ஸ்டார்க் தலா 20 ரன்கள் எடுத்தார்கள். மற்ற அனைத்து வீரர்களையும் சொற்ப ரன்களில் வீழ்த்தினார்கள் ஆண்டர்சனும் வோக்ஸும். ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டியை வெல்ல இங்கிலாந்து அணிக்கு 354 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது. அனைத்து விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெல்ல 301 ரன்கள் எடுக்கவேண்டியுள்ளது. இதனால் 2-வது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com