உலக ஹாக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா! பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தியது!

உலக ஹாக்கி லீக் போட்டியின் காலிறுதியில் இந்தியா ஷூட் அவுட் முறையில் பெல்ஜியத்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
உலக ஹாக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா! பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தியது!

உலக ஹாக்கி லீக் போட்டியின் காலிறுதியில் இந்தியா ஷூட் அவுட் முறையில் பெல்ஜியத்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

முன்னதாக புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல் அடித்திருக்க, ஆட்டம் சமன் ஆனது. இதில் இந்திய தரப்பில் 31-ஆவது நிமிடத்தில் குர்ஜந்த் சிங், 35-ஆவது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங், 46-ஆவது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பெல்ஜியம் தரப்பில் லாய்க் லுய்பெர்ட் 39 மற்றும் 46-ஆவது நிமிடங்களில் கோல் அடிக்க, செட்ரிக் சார்லியர் 53-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க நடைபெற்ற ஷூட் அவுட் முறையில் இந்தியா ஒரு கட்டத்தில் 2-0 என முன்னேற, அடுத்த இரு வாய்ப்புகளில் ஸ்கோர் செய்து 2-2 என முன்னேறி நெருக்கடி கொடுத்தது பெல்ஜியம்.

பின்னர் ஹர்மன்பிரீத் ஒரு கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்த, பெல்ஜியத்தின் கடைசி கோல் முயற்சியை அருமையாக தடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார் இந்திய கோல்கீப்பர் ஆகாஷ் சிக்தே.

ஆஸ்திரேலியா வெற்றி: இதனிடையே, மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com