ரஹானே குறித்து இந்திய அணி கவலைப்படுகிறதா?: ரவி சாஸ்திரி பதில்

ரஹானே சமீபகாலமாக நிறைய ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் அவர் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொண்டுவருவார்...
ரஹானே குறித்து இந்திய அணி கவலைப்படுகிறதா?: ரவி சாஸ்திரி பதில்

இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடி 17 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரஹானே. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இந்த நிலைமை தொடருமா என்கிற கவலை இந்திய ரசிகர்களுக்கு உண்டு.

ரஹானே குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் விராட் கோலி ஒரு பேட்டியில் கூறியதாவது:

ரஹானே சமீபகாலமாக நிறைய ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் அவர் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொண்டுவருவார். தேவைப்படும் நேரத்தில் வீரர்கள் தங்கள் உயரத்தை எட்டுவார்கள். கடினமான காலங்களில் ரஹானே தன்னை நிரூபித்துள்ளார். பன்முகத் திறமைகள் கொண்ட இந்திய அணியின் பேட்டிங் குறித்து எங்களுக்குக் கவலையில்லை.

விராட் கோலியின் கடந்த இரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களையும் பாருங்கள். முதல் சுற்றுப்பயணத்தில் அவர் மிகவும் தடுமாறினார். ஆனால் அடுத்தமுறை அவர் சாம்பியன் போல விளையாடினார். சவால்களைச் சந்திக்கும்போது அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது இவர்களுக்குத் தெரியும்.

வெளிநாடுகளில் இந்திய அணி மோசமாக விளையாடுகிறது என்கிற குற்றச்சாட்டு எங்கள் மீது உண்டு. அதை மாற்ற வீரர்கள் விரும்புகிறார்கள். அடுத்த ஒரு வருடங்கள் இந்த மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com