ஐஎஸ்எல்: ஜாம்ஷெட்பூருக்கு முதல் தோல்வி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.
இந்த சீசனில் முதல் முறையாக களம் கண்டுள்ள ஜாம்ஷெட்பூர் அணி இதுவரை 5 ஆட்டங்கள் ஆடியுள்ள நிலையில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் தனது சொந்த மண்ணிலேயே வீழ்ந்தது. 
புணே-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 16-ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் தனது முதல் கோலுக்கு முயற்சித்தது. அதை புணே கீப்பர் அருமையாகத் தடுத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் ஆதிக்கம் செலுத்தியது. இந்நிலையில் ஆட்டத்தின் 26-ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் இஸý அஸýகா, புணே வீரர் எமிலியானோ அல்ஃபாரோ ஆகியோர் விதிகளை மீறியதாக, மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 30-ஆவது நிமிடத்தில் புணே அணி தனது கோல் கணக்கை தொடங்கியது. அதனை அந்த அணியின் ஆதில் கான் அடித்தார். இதனால் புணே 1-0 என முன்னிலை பெற்றது. 
இந்நிலையில் 44-ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி தனது கோலை அடித்தது. அந்த அணியின் இஸý அஸýகா, சக வீரர் அடித்த பந்தை தலையால் முட்டி கோலடித்தார். 
ஆனால். அது விதிகளை மீறிய வகையில் இருந்ததாகக் கூறி, அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறாக முதல் பாதியில் புணே முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதியில் புணே தடுப்பாட்டத்தை பிரதானமாகக் கொண்டது. இதனால் ஜாம்ஷெட்பூருக்கு கோல் வாய்ப்புகள் இல்லாமல் போனது. இறுதியில் புணே 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
மும்பை வெற்றி: இதனிடையே, மும்பையில் நடைபெற்ற 22-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com