ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடகம் இன்னிங்ஸ் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது காலிறுதியில் மும்பையை எதிர்கொண்ட கர்நாடகம் இன்னிங்ஸ் மற்றும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது காலிறுதியில் மும்பையை எதிர்கொண்ட கர்நாடகம் இன்னிங்ஸ் மற்றும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
நாகபுரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை 56 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய கர்நாடகம் தனது முதல் இன்னிங்ஸில் 163.3 ஓவர்களில் 570 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 370 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய மும்பை 114.5 ஓவர்களில் 377 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வி கண்டது.
மே. வங்கம்-483/4: முதலாவது காலிறுதி ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக மேற்கு வங்கம் தனது 2-ஆவது இன்னிங்ஸில் 169 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 483 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. முன்னதாக அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் தனது முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய மேற்கு வங்கம், தற்போது 613 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ம.பி.-283: விஜயவாடாவில் நடைபெற்று வரும் 2-ஆவது காலிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை எதிர்கொண்டுள்ள தில்லி, 217 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடி வருகிறது. 4-ஆம் நாள் முடிவில் அந்த அணி, 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது. 
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மத்திய பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய தில்லி அனைத்து விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 67 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய மத்திய பிரதேசம், 283 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
விதர்பா-431/6: சூரத்தில் நடைபெறும் 3-ஆவது காலிறுதியில் கேரளத்தை எதிர்கொண்டுள்ள விதர்பா, ஞாயிற்றுக்கிழமை முடிவில் தனது 2-ஆவது இன்னிங்ஸில் 124 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன்களுடன் ஆடி வருகிறது. 
முன்னதாக, விதர்பா தனது முதல் இன்னிங்ஸில் 105.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய கேரளம் தனது முதல் இன்னிங்ஸில் 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் முன்னிலையுடன், 2-ஆவது இன்னிங்ûஸ ஆடி வரும் விதர்பா தற்போது கேரளத்தை விட 501 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com