ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் சௌரவ் சௌதரி

ஜப்பானில் நடைபெற்றுவரும் 10-ஆவது ஆசிய துப்பாகிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் மற்றும் குழு பிரிவில் இந்திய வீரர் சௌரவ் சௌதரி தங்கம் வென்றார்.
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் சௌரவ் சௌதரி

ஜப்பானில் நடைபெற்றுவரும் 10-ஆவது ஆசிய துப்பாகிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் மற்றும் குழு பிரிவில் இந்திய வீரர் சௌரவ் சௌதரி தங்கம் வென்றார். மகளிர் தனிநபர் பிரிவில் மானு பாகெர் வெள்ளி வென்றார். இதன்மூலம், இவர்கள் 2 பேர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஜப்பானில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய ஆசிய சாம்பியின்ஷிப் போட்டி, திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. 
இளையோர் ஆடவர் பிரிவில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் குழு பிரிவு போட்டியில், இந்தியாவின் அர்ஜுன் சிங் சீமா 577 புள்ளிகள், சௌரவ் சௌதரி 573, சுரீந்தர் சிங் 561 புள்ளிகள் எடுத்தனர்.
மொத்தம் 1711 புள்ளிகள் பெற்று ஆடவர் குழு தங்கம் வென்றது. 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தென்கொரியா வெள்ளிப் பதக்கத்தையும், 19 புள்ளிகள் வித்தியாசத்தில் சீனா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
இதேபோல், மகளிர் குழு பிரிவில் 1128 புள்ளிகளுடன் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. ஈரான் 1144 புள்ளிகளுடன் தங்கமும், கொரியா 1122 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றது.
முன்னதாக, 243.1 புள்ளிகளுடன் தனிநபர் பிரிவில் சௌரவ் சௌதரி தங்கம் வென்றார். ஈரானின் இர்ஃபான் சலாவதி 236.2 புள்ளிகளுடன் வெள்ளியும், தென்கொரியாவின் ஒச்சியோ ஷின் 217.6 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
இதே பிரிவில், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் சிங், 156.8 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தைப் பிடித்தார்.
மகளிர் பிரிவில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மானு பாகெர், 236.0 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். சீன வீராங்கனை ஜியாருயிக்ஸன் ஜியா 236.1 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு சீன வீராங்கனை ஸு லி 215.5 புள்ளிகளுடன் வெண்கலம் கைப்பற்றினார்.
ஆக மொத்தம், இந்தப் போட்டியில் 6 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலத்துடன் 21 பதக்கங்களை இந்தியா அள்ளியது குறிப்பிடத்தக்கது. அத்துடன், 2018-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கா 4 இந்தியர்கள் தகுதி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com