சர்வதேச தரவரிசை: 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது இந்திய ஹாக்கி அணி

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்திய ஹாக்கி ஆடவர் அணி 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்திய ஹாக்கி ஆடவர் அணி 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது.
மகளிர் அணி 10-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
புணேவில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. எனினும், 1566 புள்ளிகளுடன் தொடர்ந்து 6-ஆவது இடத்திலேயே நீடிக்கிறது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2005 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆர்ஜென்டீனா 1975 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளது. இதனிடையே, இந்திய ஹாக்கி மகளிர் அணி 2 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்தில் உள்ளது. ஆசிய கோப்பையை வென்றதன் மூலம் ஸ்பெயின், ஜப்பான் அணிகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 10-ஆவது இடத்தைப் பிடித்ததுள்ளது. முதல் 2 இடங்களில் நெதர்லாந்து (2165 புள்ளிகள்), இங்கிலாந்து (1823) அணிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com