முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 403 ரன்கள் குவிப்பு

ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 115.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 403 ரன்கள் குவித்தது.

ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 115.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 403 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், 62 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்டத்தில், குக் (7 ரன்), ஸ்டோன்மேன் (56 ரன்), ஜேம்ஸ் வின்ஸ் (25 ரன்), கேப்டன் ஜோ ரூட் (20 ரன்) ஆகியோர் ஆட்டமிழக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை மலான் பதிவு செய்தார். அரை சதம் அடித்து பேர்ஸ்டோவும் அணியின் ஸ்கோரை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றனர். இவ்வாறாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 305 ரன் குவித்திருந்தது. 
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில், பேர்ஸ்டோவ் சதம் அடித்தார். பேர்ஸ்டோவ்-மலான் கூட்டணியை ஒருகட்டத்தில் பிரித்தார் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் லயன்.
அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் மலான். அப்போது அவர், 140 ரன்கள் எடுத்திருந்தார்.
இதையடுத்து களம் கண்ட மொயீன் அலி, பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் "டக்' அவுட் ஆனார். பின்னர் வந்த கிறிஸ் வோக்ஸ் 8 ரன்களில் பெவிலியின் திரும்பியதைத் தொடர்ந்து, ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் பேர்ஸ்டோவ். அப்போது அவர் 119 ரன்கள் எடுத்திருந்தார்.
ஓவர்டன், ஸடுவர்ட் பிராட் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, அந்த அணி 403 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா 203/3: இதையடுத்து, தனது முதல் இன்னிங்ûஸ வெள்ளிக்கிழமை தொடங்கியது ஆஸ்திரேலியா.
தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட டேவிட் வார்னர் 22 ரன்கள் எடுத்திருந்தபோது ஓவர்டன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து, பேன்கிராஃப்ட்டை எல்பிடபிள்யூ ஆக்கினார் ஓவர்டன். அப்போது, அணியின் ஸ்கோர் 55-ஆக இருந்தது.
ஸ்மித் அரை சதம்: உஸ்மான் கவாஜா, கேப்டன் ஸ்மித் ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 52-ஆவது ஓவரின் முதல் பந்தில், வோக்ஸ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் உஸ்மான்.
அதையடுத்து, ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார் ஷான் மார்ஷ்.
ஆட்டநேர முடிவில் ஸ்மித் 122 பந்துகளில் 92 ரன்களுடனும், மார்ஷ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இவ்வாறாக ஆஸ்திரேலியா 62 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறும்.

சாதனையை முறியடித்த கூட்டணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில், இங்கிலாந்து அணியில் 5-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இரு வீரர்கள் நீண்ட நேரம் நின்று விளையாடிய சாதனையை மலான்-பேர்ஸ்டோவ் கூட்டணி முறியடித்து.
இதற்கு முன்பு கடந்த 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து அணியில் 5-ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த எடீ பான்டர்-டெனிஸ் காம்ப்டன் ஜோடி நீண்ட நேரம் நின்று விளையாடி சாதனை புரிந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com