ஆஷஸ் டெஸ்ட்: ஸ்மித் அபாரம், ஆஸ்திரேலியா 259 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர்

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 259 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
ஆஷஸ் டெஸ்ட்: ஸ்மித் அபாரம், ஆஸ்திரேலியா 259 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர்

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் 3-ஆவது டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது  முதல் இன்னிங்ஸில் 115.1 ஓவர்களில் 403 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டேவிட் மலான் அதிகபட்சமாக 140 ரன்கள் குவித்தார். பேர்ஸ்டோவ் 119 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஹாசில்வுட் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் ஸடீவன் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 399 பந்துகளைச் சந்தித்து 30 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரின் உதவியுடன் 239 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சொந்தமண்ணில் ஸ்மித் அடித்த முதல் இரட்டை சதம் இதுவாகும். அதேநேரம், ஆஷஸ் வரலாற்றிலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதமாக இது அமைந்துள்ளது.

அவருடன் விளையாடிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷும் சதம் விளாசினார். அவர் 29 பவுண்டரிகளின் உதவியுடன் 181 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றியதுடன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 179.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்காரணமாக இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 259 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com