பெங்களூர் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராகிறார் கேரி கிரிஸ்டன்!

கடந்த வருட ஐபிஎல்-லில் மோசமாக விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புகழ்பெற்ற பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனை...
பெங்களூர் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராகிறார் கேரி கிரிஸ்டன்!

கடந்த வருட ஐபிஎல்-லில் மோசமாக விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புகழ்பெற்ற பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனைப் பயிற்சியாளராக்கத் தற்போது முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய டி20 லீக் போட்டியான பிக் பாஷ் லீகில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பயிற்சியாளராக கிரிஸ்டன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து கிர்ஸ்டனுக்கு ஐபிஎல்-லிலும் புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளது. 

2014 முதல் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி உள்ளார். இந்நிலையில் கேரி கிரிஸ்டனைப் பயிற்சியாளராக்க ஆர்சிபி முன்வந்துள்ளது. கடந்த வருட ஐபிஎல்-லில் கடைசி இடத்தைப் பிடித்தது பெங்களூர். இதையடுத்து கேரி கிரிஸ்டனைப் பயிற்சியாளர் பொறுப்பில் அமர்த்த ஆர்சிபி முடிவெடுத்துள்ளது. 

இதற்கு முன்பு டெல்லி ஐபிஎல் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ள கிரிஸ்டன், 2015-ல் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். முதலில் மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிஸ்டன், டெல்லி அணி இரு வருடங்களாக மோசமாக விளையாடி எட்டாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்ததால் ஒப்பந்தம் முடிவதற்குள்ளாக இரு வருடங்களில் நீக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக இருந்தபோது டெல்லி அணி, 28 போட்டிகளில் 7-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 

இந்த நிர்வாக மாற்றத்தால் தற்போது பயிற்சியாளராக உள்ள வெட்டோரிக்கு அணியில் மற்றொரு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com