ஆஷஸ்: அலாஸ்டர் குக் புதிய சாதனை!

தன்னுடைய அணியின் இன்னிங்ஸ் முடிவுபெற்றபோது ஒரு தொடக்க வீரர், கடைசி வரை அவுட் ஆகாமல் விளையாடி எடுத்த அதிகபட்ச ரன்கள் இது... 
ஆஷஸ்: அலாஸ்டர் குக் புதிய சாதனை!

மெல்போர்ன் நகரில் பாக்ஸிங் டே அன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 144.1 ஓவர்களில் 491 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அலாஸ்டர் குக் 244 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தன்னுடைய அணியின் இன்னிங்ஸ் முடிவுபெற்றபோது ஒரு தொடக்க வீரர், கடைசி வரை அவுட் ஆகாமல் விளையாடி எடுத்த அதிகபட்ச ரன்கள் இது. இதற்கு முன்பு நியூஸிலாந்தின் கிளென் டர்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடைசி வரை ஆட்டமிழக்காமல் 223 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. அதை குக் முறியடித்துள்ளார்.  

இதுதவிர தனது இரட்டைச் சதம் மூலம் மேலும் பல சாதனைகள் புரிந்துள்ளார் குக். 

தனது 151-ஆவது டெஸ்டில் ஆடி வரும் அலாஸ்டர் குக், டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 11,956 ரன்களை எட்டியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்ற குக், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாராவை (11,953) பின்னுக்குத் தள்ளினார். 

3-வது நாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் விளாசிய அலாஸ்டர் குக், 209 ரன்களை எட்டியபோது புதிய சாதனை படைத்தார். இது, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நிய பேட்ஸ்மேன் ஒருவர் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ், கடந்த 1984-ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் 208 ரன்கள் எட்டியதே அதிகபட்சமாக இருந்தது.

டெஸ்ட் போட்டிகளில் குக் 150 ரன்களுக்கு மேலாக எடுப்பது இது 11-ஆவது முறையாகும். அதிலும், ஆஸ்திரேலியாவில் எடுப்பது இது 3-ஆவது முறையாகும். இங்கிலாந்து வீரர்களில் வேறு எவரும் ஒட்டுமொத்தமாக இத்தனை முறை 150 ரன்களைத் தாண்டியதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com