ஹைதராபாத் டெஸ்ட்: முஷ்பிகுர் சதம்; வங்கதேசம் 388-ல் 'ஆல் அவுட்'

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று உணவு இடைவேளையின் பொழுது வங்கதேசம் 388 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஹைதராபாத் டெஸ்ட்: முஷ்பிகுர் சதம்; வங்கதேசம் 388-ல் 'ஆல் அவுட்'

ஹைதராபாத்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று உணவு இடைவேளையின் பொழுது வங்கதேசம் 388 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹீம் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.  

எட்டு விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் வங்கதேச அணி தனது பேட்டிங்கைத்  தொடங்கியுயது. முஷ் பிகுர் - மிராஸ் இருவரும் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ் குமார் பந்து வீச்சில் மிராஸ் (51) ஆட்டம் இழந்தார்.

பின்னர் அணித்தலைவருடன் இணைந்த தைஜுல் இஸ்லாம், அணியின் ஸ்கோர் 339 ஆக இருக்கும் பொழுது    உமர் யாதவ் பந்து வீச்சில் விரைவில் வெளியேறினார்.   பின்னர் களம் புகுந்த தஸ்கின் அகமது முஷ் பிகுருடன் சேர்ந்து 9-ஆவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்தார். பின்னர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி சதமடித்த வங்கதேச அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹீம் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சில், சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 127 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிக விரைவாக 250 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்.   

இறுதியில் வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸ் 38 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

தற்போதைய நிலையில் இந்திய அணி வங்கதேசத்தை விட 300 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com