வயிற்று வலி தொந்தரவால் பாதியில் வெளியேறிய ஆஸி. தொடக்க வீரர் ரென்ஷா!

உணவு இடைவேளைக்கு 15 நிமிடங்கள் இருக்கும் வேளையில் வார்னர் விக்கெட் வீழ்ந்தவுடன்...
வயிற்று வலி தொந்தரவால் பாதியில் வெளியேறிய ஆஸி. தொடக்க வீரர் ரென்ஷா!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் இன்று தொடங்கியது. தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, 7-ஆவது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆரம்பம் முதல் மிகவும் கவனமாக விளையாடினார் தொடக்க வீரர்களான வார்னரும் ரென்ஷாவும். 

38 ரன்களில் வார்னரை க்ளீன் போல்ட் செய்தார் உமேஷ் யாதவ். ஆனால் அடுத்தப் பந்திலேயே ரென்ஷா ரிரையர் ஹர்ட் முறையில் 36 ரன்களில் மைதானத்தை விட்டு வெளியேறினார். வயிற்று வலி தொடர்புடைய உடல்நலக் குறைவால் அவர் வெளியேறியதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. 

உணவு இடைவேளைக்கு 15 நிமிடங்கள் இருக்கும் வேளையில் வார்னர் விக்கெட் வீழ்ந்தவுடன் வயிற்று வலி தொந்தரவால் வெளியேறினார் ரென்ஷா. இதனால் ஸ்மித்துக்குப் பின்னால் உடனே களத்துக்குச் செல்லவேண்டிய நிலைமை ஷான் மார்ஷுக்கு ஏற்பட்டது. இதனால் ஸ்மித், மார்ஷ் என புதிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலைமை உருவானது.

முதல்நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ், ஸ்மித் ஆகிய இருவரும் தலா 1 ரன்னில் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com