டெஸ்ட் படுதோல்வி: சாதனைகளும் வேதனைகளும்! புள்ளிவிவர அலசல்!

இந்திய மண்ணில் இந்தியா சந்தித்த இரண்டாவது பெரிய தோல்வி இது...
டெஸ்ட் படுதோல்வி: சாதனைகளும் வேதனைகளும்! புள்ளிவிவர அலசல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.

டெஸ்ட் போட்டியின் முக்கிய புள்ளிவிவரங்கள்:

இந்திய டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வெளிநாட்டு வீரர்கள்:

13/106 போத்தம், மும்பை, 1980
12/70 ஸ்டீவ் ஓ’கீஃப், புணே, 2017
12/94 ஃபசல் மஹ்மூத், லக்னோ, 1952

33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. இந்திய மண்ணில் இந்தியா சந்தித்த இரண்டாவது பெரிய தோல்வி இது. 2004-ல் நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இந்திய அணி சொந்த மண்ணில் சந்தித்த பெரிய தோல்வியாகும். அதற்கு அடுத்தப் பெரிய தோல்வியை புணேவில் சந்தித்துள்ளது. 

இந்த டெஸ்டில் மொத்தமாக 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் கோலி. இந்தியாவில் அவருடைய மோசமான பேட்டிங் இதுவே. 

இந்தியா கடைசியாக 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தது. அதற்கு இப்போதுதான் தோற்கிறது. ஆஸ்திரேலிய அணி 2004-ல் இந்தியாவில் டெஸ்ட் போட்டியை ஜெயித்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் ஜெயித்துள்ளது. 

இந்தியாவில் தொடர்ந்து 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தபிறகு இந்த வெற்றியைப் பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. 

2001-ல் கொல்கத்தா டெஸ்டில், 18 டெஸ்டுகளில் தோல்வியடையாது இருந்த ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இந்தியா. இப்போது 19 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்த இந்தியாவின் சாதனையை முறியடித்துள்ளது ஆஸ்திரேலியா. 

இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்தியாவில் மட்டுமே 100 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதை 16 டெஸ்டுகளில் சாதித்து சாதனை செய்துள்ளார். இதற்கு முன்பு 19 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்தவர் ஹர்பஜன். இச்சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார். 

24 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த விராட் கோலி, இதுவரை எந்தவொரு அணியையும் அப்படியே அடுத்த டெஸ்ட் போட்டிக்குத் தேர்வு செய்ததில்லை. இவர் கேப்டனாக இருந்த எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் குறைந்தது ஒரு மாற்றமாவது இருக்கும். 

இந்த டெஸ்டில் இந்திய அணி 74 ஓவர்கள் மட்டுமே விளையாடி 212 ரன்களுக்கு 20 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்தியாவில் ஆடிய டெஸ்ட் போட்டியில் இதற்கு நிகராக குறைந்த ஓவர்களில் விளையாடி இவ்வளவு குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்ததே இல்லை. 

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு 14 டெஸ்ட் விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருந்தார் ஓ’கீஃப். இந்த டெஸ்டில் மட்டும் 12 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com