மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா, ஜெயராம்

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா, ஜெயராம்

மலேசியா மாஸ்ட்ர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், அஜய் ஜெயராம் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

மலேசியா மாஸ்ட்ர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், அஜய் ஜெயராம் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாதினியை எதிர்கொண்ட சாய்னா, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இருவருக்கும் இடையேயான ஆட்டம் 42 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. சாய்னா தனது காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் ஃபிட்ரியானி ஃபிட்ரியானியை சந்திக்கிறார்.
அதேபோல், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் அஜய் ஜெயராம், சீன தைபேவின் ஸுயேஹ் ஸுவானை எதிர்கொண்டார். இதில் ஜெயராம் 21-12, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்றார். ஜெயராம் தனது காலிறுதியில் இந்தோனேஷியாவின் அன்டோணி சினிசுகா கிங்டிங்கை எதிர்கொள்கிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி/சுமீத் ரெட்டி ஜோடி 17-21, 21-18, 12-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹென்ட்ரா அப்ரிடா/மார்கிஸ் கிடோ ஜோடியிடம் வீழ்ந்தது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபர்னா பாலன்/பிரஜக்தா சாவந்த் இணை, 18-21, 14-21 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் சியாங் காய்/ஹங் ஷீஹ் ஹான் இணையிடம் வீழ்ந்தது.
கலப்பு இரட்டையரில் மானு அத்ரி/ஜுவாலா கட்டா ஜோடி, 18-21, 10-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் டான்டோவி அஹ்மத்/கிளோரியா வித்ஜாஜா இணையிடம் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com