காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முர்ரே, ஃபெடரர்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முர்ரே, ஃபெடரர்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் முர்ரே தனது 3-ஆவது சுற்றில், உலகின் 32-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் சாம் குவெரியுடன் மோதினார். இருவருக்கும் இடையே 2 மணி நேரம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் முர்ரே வெற்றி பெற்றார்.
முர்ரே தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் மிஸ்சா ஸுவெரெவை சந்திக்க உள்ளார்.
இதனிடையே நடைபெற்ற மற்றொரு 3-ஆவது சுற்றில் செக். குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்தித்தார் ஃபெடரர். இந்த ஆட்டத்தில் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஃபெடரர் வென்றார். அடுத்து நடைபெறும் முர்ரே-மிஸ்சா இடையேயான மோதலில் வெல்பவர், ஃபெடரருடன் மோத உள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அந்த ஆட்டத்தில் செர்பியாவின் விக்டர் டிராய்கியை எதிர்கொண்ட வாவ்ரிங்கா, 3-6, 6-2, 6-2, 7-6(7) என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.
அதேபோல், ஸ்லோவேகியாவின் லூகாஸ் லாக்கோவை 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் ஜப்பானின் கெய் நிஷிகோரி. பிரான்ஸின் ஜோ வில்ஃப்ரைடு சோங்கா தனது 3-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை 7-6(4), 7-5, 6-7(8), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
சானியா முன்னேற்றம்


மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா/ செக். குடியரசின் பார்போரா ஸ்டிரைக்கோவா ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் இந்த ஜோடி, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர்/ சீனாவின் ஷுவாய் ஸாங் இணையை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
சானியா-பார்போரா ஜோடி, தங்களது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானிய ஜோடியான எரி ஹோஸுமி/ மியு காட்டோவை சந்திக்க உள்ளது.
போபண்ணா ஜோடி தோல்வி: இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ உருகுவேவின் பாப்லோ கியூவாஸ் ஜோடி தனது 3-ஆவது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறியது.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட்/ பிராட்லி மெளஸ்லி ஜோடியை சந்தித்த இந்த இணை, 6-2, 6-7(2), 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தது.
கெர்பர் வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், செக். குடியரஸின் கிறிஸ்டினா பிலிஸ்கோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 55 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் நடப்புச் சாம்பியனான கெர்பர் 6-0, 6-4 என்ற செட் கணக்கில் கிறிஸ்டினாவை வென்றார்.
கெர்பர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் கோகோ வான்டேவேகை சந்திக்கிறார். முன்னதாக கனடாவின் இயூஜின் பெளச்சார்டை எதிர்கொண்ட வான்டேவேக், 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் அதில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் லாத்வியாவின் அனஸ்தாஸியா செவஸ்டோவாவை எதிர்கொண்ட ஸ்பெயினின் கார்பின் முகுருஸா, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி கண்டார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் தனது 3-ஆவது சுற்றில் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் சீனாவின் யிங் யிங் டுவானை வீழ்த்தினார்.
அதேபோல், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிக்கை 6-4, 5-7, 9-7 என்ற செட் கணக்கில் வென்றார் ரஷியாவின் ஸ்வெட்லினா குஸ்நெட்úஸாவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com