கொல்கத்தா ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 322 ரன்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக   322 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 322 ரன்கள்!

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக   322 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியைப் பொறுத்த வரை முதலிரண்டு போட்டிகளில் சரியாகி விளையாடாத துவக்க ஆட்டக்காரர்    தவான் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரகானே சேர்க்கப்பட்டார். அதே போல் இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ், ஜோ ரூட் ஆகியஇருவரும் நீக்கப்பட்டு அவர்காளுக்குப் பதிலாக பில்லிங்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

தொடக்க வீரர்களாக காலம் இறங்கிய ராய் மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 17.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருக்கும்போது அந்த அணி முதல் விக்கெட்டை இழந்தது. பில்லிங்ஸ் 35 ரன்களிலும், ராய் 65 ரன்களிலும் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த இரு விக்கெட்டுக்களையும் ஜடேஜா வீழ்த்தினார்.

3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நன்றாக விளையாடி வந்த மோர்கன் 43 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஆட்டம் இழந்தார். அதேபோல் மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த பேர்ஸ்டோவ் 56 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பட்லரையம் 11 ரன்னில் அவுட்டாக்கி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் பாண்டியா.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 43 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் என்ற நிலையிலிருந்த பொழுது,  அதனால் 300 ரன்கள் கூட எடுக்க முடியாது என்று இந்தியா கருதியது.

ஆனால் 7-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஜோடி இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தது. இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் ஏறாத துவங்கியது. கிறிஸ் வோக்ஸ் 19 பந்தில் 34 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பென் ஸ்டோக்ஸ் 39 பந்தில் 57 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 10 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஜடேஜா 10 ஓவரில் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். தற்பொழுது

322 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com